பொங்கல் திருநாளை முன்னிட்டு 1,19,161 போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு ரூ.7.1 கோடி “சாதனை ஊக்கத்தொகை” வழங்கப்படும் என தமிழக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒரு இலட்சத்து 19,161 போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு மொத்தம் 7 கோடியே 1 இலட்சம் ரூபாய் ‘சாதனை ஊக்கத்தொகை’ வழங்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.இது தொடர்பாக,வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: “தமிழ்நாட்டில் சிறப்பான மற்றும் திறமையான போக்குவரத்து சேவையை பொதுமக்களுக்கு அளிப்பதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் முக்கியப் […]