கோவையில் உள்ள விவசாய நிலத்திலிருந்து மூன்றாவது முறையாக 15அடி நீளமுள்ள ராஜநாகத்தை வனத்துறையினர் மீட்டுள்ளனர். கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரை அடுத்த நரசீபுரம் மலையடிவார பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் ராஜநாகம் ஒன்று புகுந்துள்ளதாக போளுவாம்பட்டி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலை தொடர்ந்து வனச்சரகர் ஆரோக்கியசாமி தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்று, பாம்பு பிடிக்கும் நபர்களின் உதவியுடன் விவசாய நிலத்தில் புகுந்த 15 அடி வரை நீளமுள்ள பெண் ராஜநாகத்தை பத்திரமாக மீட்டனர். ஏற்கனவே நரசீபுரம் விவசாய […]