கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தை சேர்ந்த கனிமொழி என்பவர் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 27ம் தேதி நடந்த சாலை விபத்தில் மஉயிரிழந்தார். இதையடுத்து கனிமொழியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். தமிழக அரசு உறுப்பு மாற்று விதிமுறைகளின்படி கனிமொழியின் இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் மற்றும் கண்கள் ஆகியவை தானம் செய்யப்பட்டது. பேராசிரியை கனிமொழியின் உடல் உறுப்பு தானத்தின் மூலம் 7 பேர் மறுவாழ்வு […]