மத்திய பிரதேசம் மோரினா மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு கலப்பட பால் விற்பனை செய்வதாக மத்திய பிரதேச மாநில போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த தகவலை தொடர்ந்து நேற்று முன்தினம் சுமார் 12-க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.அந்த சோதனையில் 10,000 லிட்டர் கலப்பட பால் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த அந்த கலப்பட பாலில் ஷாம்பு ,சோப்பு பவுடர் , சோடியம் தையோசல் போன்ற ரசாயன பொருள்கள் கலந்து இருந்தது ஆய்வில் தெரியவந்தது.மத்திய பிரதேசத்தில் […]