சென்னை : அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நிராகரிக்கக் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த 2022 ஜூலை 11-ல் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இபிஎஸ்-ஐ பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்த தீர்மானத்திற்கு எதிராக, கட்சி உறுப்பினர் சூரியமூர்த்தி தொடர்ந்த வழக்கு செல்லும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு, இபிஎஸ்-இன் தலைமைக்கு சவாலாக அமைந்துள்ளது. நீதிமன்றம், அதிமுகவின் பொதுச்செயலாளர் […]