விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திர பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி விடுதி முழுவதும் கொரோனா வார்டாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு தங்கிருந்த 102 மாணவர்களும் ஊழியர்களும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தி நியூஸ் மினிட் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் முதன்மை தொடர்புகள் கண்டறியப்பட்டு, அவற்றின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வைரஸ் மேலும் பரவுவதைக் தடுக்க சோதனை செய்யப்படுகிறது. இதுவரை ஆயிரம் மாணவர்கள் சோதனை செய்யப்பட்டுள்ளது என்றும் “வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட அதிகாரிகள் […]