ஆஸ்திரேலியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திய வெளிநாட்டு பயணிகளுக்கு அனுமதி அளிப்பதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கொரோனா நோய்த்தொற்று பரவலுக்கு பிறகு உலக நாடுகளில் வெளிநாட்டு பயணிகளுக்கு பல்வேறு பயண கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றது. இந்நிலையில் பல்வேறு உலக நாடுகள் தங்கள் நாட்டுக்குள் பயணிக்க கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவது, மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்திய நபர்களை அனுமதிப்பது போன்ற விதிமுறைகளை பின்பற்றி வருகிறது. அதுபோல தற்போது ஆஸ்திரேலிய நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளதாவது, […]
ஐசிசி டி-20 உலகக் கோப்பை வெற்றியை ஆஸ்திரேலிய வீரர்கள் ஷூவில் பீர் ஊத்தி குடித்து கோலாகலாமாக கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற ஐசிசி டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும், வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் விளையாடியது.இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 […]
ஆஸ்திரேலியாவின் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி பட்டியலில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான கோவாக்சின் சேர்க்கப்பட்டுள்ளது. பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசி இந்தியாவில் அதிக அளவில் பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஆனால், கோவாக்சின் தடுப்பூசிக்கு இன்னும் உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளிக்கவில்லை. இந்நிலையில் இந்த கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி கொண்ட பயணிகள் ஓமன் நாட்டிற்கு தனிமைப்படுத்துதல் இன்றி செல்லலாம் என அந்நாட்டு அரசு கடந்த வாரம் தெரிவித்திருந்தது. தற்பொழுதும் இந்த கோவாக்சின் தடுப்பூசியை செலுத்திக்கொண்டவர்கள் தனிமைப்படுத்துதல் […]
11.4 ஓவரிலேயே 126 ரன்கள் எடுத்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது இங்கிலாந்து அணி. டி20 உலக்கோப்பை கிரிக்கெட் போட்டி திருவிழா ரசிகர்களில் ஆரவாரத்திற்கு நடுவே கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில், இன்றைய போட்டியில், பலம்வாய்ந்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. அதில் முதலில் ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்தது. அதில், இங்கிலாந்து அணி பந்துவீச்சாளர்களின் பஞ்சுவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதில் […]
கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோவை போன்று ஆஸ்திரேலிய அணி வீரர் டேவிட் வார்னர் கோகோ-கோலா பாட்டில்களை அகற்றிய சம்பவம் நேற்று அரங்கேறியுள்ளது. ஹங்கேரிக்கு எதிரான போர்ச்சுகலின் யூரோ 2020 கால்பந்தின் தொடக்க ஆட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர் சந்திப்பில்,கால்பந்து சூப்பர் ஸ்டார் ரொனால்டோ,மேசையில் வைக்கப்பட்டிருந்த கோகோ கோலா பாட்டில்களை அகற்றி,தண்ணீர் பாட்டில்களைப் பிடித்துக் கொண்டு “தண்ணீர் அருந்தவும்” என்று கூறினார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கோகோ கோலாவின் பங்குகள் 1.6 சதவீதம் சரிந்ததாகவும், இதனால் நிறுவனத்திற்கு 5.2 பில்லியன் டாலர் […]
ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள ஆஷஸ் போட்டிக்கான 17 பேர் கொண்ட வீரர்களை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு. ஆஷஸ் தொடர் என்பது ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடராகும். இந்தத் தொடர் 2 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுவது வழக்கம். ஆனால், ஆஸ்திரேலியாவில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இந்தாண்டு ஆஷஸ் தொடர் நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்த நிலையில், ஆஷஸ் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து வீரர்கள் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது உறுதியானது. இந்த […]
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் 5.8 ரிக்டர் அளவில் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பர்ன் நகருக்கு அருகே ஒரு மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டு உள்ளது. அதில் மிக அதிக அளவாக ரிக்டர் அளவுகோலில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் மான்ஸ்ஃபீல்ட் பகுதியில் மையம் கொண்டிருந்ததாகவும், மெல்பர்ன், சிட்னி ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் பல சேதமடைந்துள்ளது. […]
11 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ட்ராகன் போன்ற பறக்கக்கூடிய அரிய வகை உயிரினப்படிவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் 11 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வேட்டையாடும் திறன் கொண்ட பறவையின் கீழ்த்தாடை படிவுகள் கண்டு பிடித்துள்ளனர். ட்ராகன் போன்ற அமைப்பு உடைய இந்த உயிரினத்தின் புதைப்படிமங்கள் கிடைத்துள்ளது. இதற்கு ‘தபுங்காகா ஷாவி’ என்று பெயர் வைத்துள்ளனர். இந்த பறக்கக்கூடிய ட்ராகன் போன்ற உயிரினம் 11 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் […]
ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த கொரோனா தொற்று பரவல் உலக நாடுகளை பெரியளவில் பாதித்து வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பவர்களின் எண்ணிக்கையும் கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மேலும் கொரோனா வைரஸ் பல வகைகளில் உருமாறி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி உலக நாடுகளில் வேகமாக நடைபெற்று வருகிறது. கொரோனா உலக […]
ஆஸ்திரேலிய மாஸ்டர் செஃப் பட்டத்தை இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜஸ்டின் நாராயண் வெற்றிபெற்றுள்ளார். ஆஸ்திரேலியாவில் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜஸ்டின் நாராயண் வென்றுள்ளார். உலக அளவில் மிகப்புகழ் பெற்ற சமையல் நிகழ்ச்சி ஆஸ்திரேலியாவில் நடக்கும் மாஸ்டர் செஃப் டிராபி நிகழ்ச்சி. தற்போது இதன் பதிமூன்றாவது சீசனின் இறுதி போட்டி நேற்று ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இந்த இறுதி போட்டிக்கு மூன்று பேர் தேர்வாகியுள்ளனர். ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜஸ்டின் […]
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றிக்கொண்டது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவில் பயணம் மேற்கொண்டு டி-20, டெஸ்ட் தொடர்கள், ஒருநாள் தொடர்கள் போன்ற தொடர்களில் விளையாடி வருகிறது. தற்போது செயின்ட் லூசியாவில் ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 5 டி-20 தொடர்கள் நடந்து வருகிறது. அதில் முதல் தொடரில் மேற்கிந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்ரேலியாவை வீழ்த்தியது. இரண்டாவது தொடரிலும், ஆஸ்ரேலிய அணியை 56 […]
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டி லண்டனில் நடைபெற்றதில், ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்டி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டி நேற்று ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்டி மற்றும் செக் குடியரசு வீராங்கனை கரோலினா பில்ஸ்கோவா இடையே நடைபெற்றது. இதில் மூன்று செட்கள் நடந்தது. அதில் முதல் செட்டில், ஆஷ்லி பார்டி 6-4 என்ற கணக்கில் முன்னிலை வகித்தார். இரண்டாவது செட்டில் பார்டி கடுமையாக […]
ஆஸ்திரேலியாவில் சில கிலோ மீட்டர் தூரத்திற்கு சிலந்திகள் பிண்ணிய வலையை பார்த்து அச்சத்தில் உறைந்த மக்கள். ஆஸ்திரேலியாவில் விக்டோரியா மாகாணத்தில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு கனமழை பெய்து, பெரு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது அந்த பகுதிகளில் வெள்ளங்கள் முற்றிலும் வடிந்த நிலையில், கிப்ஸ்லாந்தின் பல பகுதிகளில்சிலந்தி வலைகள் போர்வை போல காணப்படுகிறது. சில கிலோ மீட்டர் தூரத்திற்கு சிலந்திகள் வலை பிண்ணியுள்ள நிலையில், இதைப் பார்க்கும்போது மெல்லிய பட்டாடை போல காட்சியளிக்கிறது. இதுகுறித்து, நிபுணர்கள் […]
ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய ராட்சத டைனோசரின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டில் முதன் முறையாக,ஆஸ்திரேலியாவில் உள்ள குயீன்ஸ்லாந்து மாநிலத்தில் ஒரு பண்ணையில் சில ராட்சத எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. பின்னர் அவை டைனோசரின் எலும்புகள் என்றுஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தினர். இதனை தொடர்ந்து பல ஆண்டுகளாக டைனோசரை குறித்த ஆய்வு நிகழ்ந்து கொண்டு இருந்தது. தற்போது 9 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மிக பெரிய ராட்சத டைனோசரின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்ட்ரோலோடைடன் கூப்பெரென்சிஸ் என்ற அழைக்கப்படும் இந்த டைனோசர் ராட்சத […]
ஆஸ்திரேலியாவின் “காப்டர் பேக்” எனப்படும் மனிதர்கள் பறக்க உதவும் சாதனம். சமூக ஊடகங்களில் வைரல். ஆஸ்திரேலியாவில் “காப்டர் பேக்” என்ற,மனிதர்கள் பறக்க உதவும் சாதனம் தயாரிக்கப்பட்டுள்ளன. அதாவது,ஹெலிகாப்டரில் பயன்படுத்தப்படும் மோட்டார் மற்றும் விசிறி போன்ற ரோட்டார் அமைப்புகள் இந்த வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ளன. இவை ஒரு பேக் போன்று முதுகில் பொருத்தப்பட்டு,அதன்மூலம்,ஒரு குறிப்பிட்ட உயரத்தில் பறக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல்,ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு ஹெலிகாப்டர் கீழே விழும் நிலை ஏற்பட்டால்,காப்டர் பேக்கிலிருக்கும் பாராசூட் உடனடியாக விரிந்து உயிரை காப்பாற்றும் […]
ஆவடியில் ஆஸ்திரேலிய ஆந்தை. பறக்கமுடியாமல் தடுமாறிய ஆந்தைக்கு முதலுதவி செய்த வனத்துறையினர். பொதுவாகவே வெளிநாட்டு பறவைகள், சில குறிப்பிட்ட நாட்களில் மற்ற இடங்களுக்கு வலசை செல்வதுண்டு. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் வேப்பம்பட்டு குடியிருப்பு பகுதியில், இன்று காலையில் அரியவகை ஆந்தை ஒன்று திடீரென்று கீழே விழுந்து கிடந்துள்ளது. இந்த பறவையை பார்ப்பதற்காக அங்கு ஏராளமான மக்கள் கூடியுள்ளனர். அந்த பறவை பறக்க முடியாமல் தடுமாறிய நிலையில், சமூக ஆர்வலர் பாலமுருகன் என்பவர் அந்த ஆந்தையை மீட்டு, ஆந்தையை […]
நியூசிலாந்தில் நூற்றாண்டுக்கு பின்னர் ஏற்பட்ட வெள்ளத்தால் மக்கள் அஞ்சி வருகின்றனர். ஆஸ்திரேலியாவில் உள்ள சிறிய நாடு நியூசிலாந்து. இங்கு கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழையால் தற்போது அங்கு மிக மோசமான அளவில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அங்குள்ள கர்டர்பி மாகாணத்தில் பெருமளவு மழை பெய்ததால் அங்குள்ள ஆறு மற்றும் நீர்ப்பாசன வசதிகள் அனைத்தும் நிரம்பி அபாய கட்டத்தை அடைந்துள்ளது. இதன் காரணமாக அங்குள்ள 3000 க்கும் அதிகமான குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு […]
3,000 ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலியாவின் வனப்பகுதிக்குள் மீண்டும் வந்த டாஸ்மேனியன் டெவில். டாஸ்மேனியன் டெவில் என்பது பாலூட்டிகளில் வயிற்றில் பையில் உள்ள மாமிச உண்ணி இனத்தை சேர்ந்தது இ.து ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா பகுதியில் மட்டுமே காணப்பட்டதால் இதற்கு டாஸ்மேனியன் டெவில் என்று பெயரிட்டுள்ளனர். இந்த விலங்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அதிக எண்ணிக்கையில் இருந்தது. ஆனால் ஆஸ்திரேலியாவில் படிப்படியாக இதன் எண்ணிக்கை குறைந்து, ஒன்றரை லட்சம் அளவுக்கு வந்துவிட்டது. மேலும் 1990 ஆம் ஆண்டுகளில் அரிய வகை […]
ஆஸ்திரேலியாவில் திருட வந்தவனை கொன்று சடலத்தை வீட்டில் 15 ஆண்டுகளாக மறைத்து வைத்த நபர். புரூஸ் ராபர்ட் என்பவர் ஆஸ்திரேலியாவில் சிட்னி என்ற இடத்தில் வசித்துவந்தார். இவரது வீட்டில் கடந்த 2002 ஆம் ஆண்டில் ஒருவர் திருடுவதற்காக வந்துள்ளார். திருடனை துப்பாக்கியால் சுட்டு, அவரது உடலை வீட்டிலேயே மறைத்து வைத்துள்ளார். இதனால் வீட்டில் சடலத்தின் துர்நாற்றம் வீசத்தொடங்கியுள்ளது. இதை மறைக்க 70-க்கும் மேற்பட்ட ஏர் பிரெஷ்னர்களை பயன்படுத்தியுள்ளார். இதன் பிறகு புரூஸ் ராபர்ட் என்பவருக்கு 2017 ஆம் […]
ஆஸ்திரேலியாவில் உள்ள வீடுகள்,விவசாய நிலங்கள் போன்ற அனைத்தும் லட்சக்கணக்கான எலிகளின் படையெடுப்பால் பாதிக்கப்பட்டுள்ளன.மேலும்,எலிகளினால் அங்குள்ள மக்களுக்கு பிளேக் நோயும் பரவி வருகிறது. ஆஸ்திரேலியவில்,மில்லியன் கணக்கான எலிகள்,வீடுகள் மற்றும் விவசாயப் பண்ணைகளை நோக்கி படையெடுத்து வருகின்றன. இதனால்,அங்குள்ள விவசாயிகளும்,மக்களும் எலிகளின் கடுமையான தாக்குதலை எதிர்கொள்கின்றனர். மேலும்,கடந்த சில வாரங்களாக ஆஸ்திரேலியாவில் லட்சக்கணக்கான எலிகள் பயிர்களுக்கு பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளன. அதனால், அறுவடை பயிர்களை விற்க முடியாமல் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.அது மட்டுமல்லாமல்,சிலர் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டு கிராமப்புற மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக […]