இன்று நாடு முழுவதும் நடைபெறக்கூடிய பாரத் பந்த் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தந்தாலும், வங்கியின் ஊழியர்கள் கலந்து கொள்ளப் போவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்திற்கு எதிராக டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் கடந்த இரு வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் நடத்தி வரக்கூடிய இந்த போராட்டத்திற்கு நாடு முழுவதிலும் முழு அடைப்பு செய்து தங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறு விவசாய […]