காவிரி நீர் சர்ச்சை : தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்பதில் கர்நாடகா இருந்த நிலையில், தற்போது தண்ணீர் திறந்து விட வேண்டுமென்று காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரியில் தண்ணீர் திறப்பது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே தொடர்ந்து பிரச்சனை நீடித்து கொண்டே தான் வருகிறது. இதற்கு ஒரு தீர்வை கொண்டுவரவே காவிரி மேலாண்மை ஆணையமும், காவிரி நீர் ஒழுங்காற்று குழுவும் கடந்த 2018-ம் ஆண்டு அமைக்கப்பட்டன. மேலும், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது […]