புதுச்சேரியின் தலைமைச் செயலாளர் அஸ்வினி குமார் ஐஏஎஸ் டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளார்.அவருக்கு பதிலாக அருணாச்சல பிரதேசத்தின் தலைமைச் செயலாளராக இருந்த ராஜீவ் வர்மா ஐஏஎஸ் புதுச்சேரியின் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வருகின்ற ஏப்ரல் 24 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுச்சேரிக்கு வரும் நிலையில் தலைமைச் செயலாளர் மாற்றப்பட்டுள்ளார். அதைப்போல,டெல்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) தலைவர் தர்மேந்திரா ஐஏஎஸ் அருணாச்சல பிரதேசத்தின் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதைப்போல,அருணாச்சல பிரதேசத்தின் தலைமைச் செயலாளர் நரேஷ் குமார் […]
தமிழகத்தில் மூன்று ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மூன்று ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் இறையன்பு அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பால்வளம், பால் பண்ணை வளர்ச்சித்துறை ஆணையராக ஜி.பிரகாஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கனிமவளத்துறை மேலாண் இயக்குநராக சுதீப் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு அரசின் எல்காட் நிறுவன செயல் இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி அருண்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 7 பேருக்கு கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்துக்கு பதவி உயர்வு அளித்து தலைமை செயலாளர் உத்தரவு. ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 7 பேருக்கு கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்துக்கு பதவி உயர்வு அளித்து தலைமை செயலாளர் வெ.இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார். 1991ம் ஆண்டு பேட்ச் தமிழ்நாடு கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 7 பேருக்கு தலைமைச் செயலாளர் அந்தஸ்திலான பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, நிதித்துறை முதன்மைச் செயலாளர் முருகானந்தம், சுற்றுச்சூழல் துறை செயலாளர் சம்பு கல்லோலிகர், […]
ஓமிக்ரான் பரவல் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் வெ.இறையன்பு இன்று ஆலோசனை. தமிழகத்தில் ஓமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் பண்டிகை காலங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது குறித்து தலைமை செயலாளர் வெ.இறையன்பு, மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். சென்னை தலைமை செயலகத்தில் பிற்பகல் 12 மணியளவில் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடைபெற உள்ளது. காணொலி வாயிலாக நடைபெற இருக்கும் ஆலோசனை கூட்டத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகளின் போது […]
ஆய்விற்காக வரும்பொழுது ஆடம்பர ஏற்பாடுகள் வேண்டாம், எளிய உணவுகளே போதும் என தலைமை செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் தெரிவித்துள்ளார். நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி திமுக கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றதிலிருந்து பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். அவரின் சீரிய முயற்சியும், தீவிர நடவடிக்கைகளும் பலரையும் வியக்கவைத்துள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் பல அதிகாரிகளை மாற்றம் செய்தார். அப்போது தமிழக அரசின் தலைமை செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் அவர்களை நியமித்தார். இது பலரின் கவனத்தையும் ஈர்த்தது. மேலும், […]
மாற்றுத்திறனாளிகள் தொடர்பான வழக்குகளில் உயர் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாததால் தலைமைச் செயலர் ஆஜராக உத்தரவு. கடந்த 2017-ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான பொதுப் போக்குவரத்து வசதி இல்லை என வழக்கு தொடரப்பட்டது. இதைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றம் மாற்றுத்திறனாளிகளுக்கான பொதுப் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. ஆனால், அந்த உத்தரவு முறையாக அமல்படுத்தவில்லை என கூறி மீண்டும் வழக்கு தொடரப்பட்டது. அதில், 2017-க்குப் பிறகு வாங்கப்பட்ட 4,381 பேருந்துகளில் ஒரு பேருந்தில் கூட மாற்றுத்திறனாளிகளுக்கான […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை நல்ல மழை பொழிவைக் கொடுக்கும். அதேபோல் அந்த மழை பொழிவால் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு பொதுமக்களுக்கும் அரசுக்கும் மிகுந்த சிரமத்தை கொடுக்கும்.எனவே இதை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தற்போது தமிழகஅரசு எடுத்து வருகிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை சென்னை […]
தமிழகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தவுள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 5,928 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4,39,959 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் வருகின்ற 4-ம் தேதி அன்று மாலை 4 மணிக்கு காணொலி காட்சி […]