சின்னக் கலைவாணர் விவேக் சாலை என்ற பெயர் பலகையை திறந்து வைத்தார் மருத்துவத்துறை அமைச்சர். பிரபல நடிகரும், சமூக ஆர்வலருமான நடிகர் விவேக் கடந்த ஆண்டு ஏப்ரல் 17ல் மாரடைப்பால் காலமானார். கோவில்பட்டியில் பிறந்த விவேக், சென்னை, தலைமை செயலகத்தில் ஊழியராக பணியாற்றியவர். பாலசந்தரின் ‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற திரைப்படம் மூல தமிழ் சினிமாவில் அறிமுகமானார். துணை நடிகர் மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்தது மட்டுமின்றி, மேடை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இவர் சினிமா துறையில் மட்டுமல்லாது, […]