ராஜஸ்தானின் பாம்பு மனிதர் என்று அறியப்பட்ட வினோத் திவாரி, பாம்பு கடித்து உயிரிழந்தார். ராஜஸ்தான் மாநிலத்தின் சுறு மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயதான வினோத் திவாரி பாம்பு மனிதர் என்று அழைக்கப்படுபவர். பாம்புகளை பிடித்து அவற்றைப் பாதுகாப்பாக காட்டில் விடுவது போன்றவற்றை மிகவும் கவனமாகக் கையாள்வதில் சிறந்தவர் என்று கூறப்படுகிறது. சுரு மாவட்டத்தின் கோகமேடி பகுதியில் உள்ள ஒரு கடைக்கு வெளியே வினோத் திவாரி பாம்பை பிடித்து அதைப் பையில் வைக்க முயலும் போது பாம்பு கடித்ததில் […]