கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறவில்லை. இதனிடையே மகாத்மா காந்தி பிறந்த நாளான இன்று கிராமசபை கூட்டங்கள் நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியது. இந்நிலையில் மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு தமிழகமெங்கும் இன்று நடைபெற உள்ள கிராம சபை கூட்டங்களுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை உள்ளாட்சித்துறை வெளியிட்டது. இதன்படி காலை 11 மணியளவில் கிராம சபை கூட்டங்களை நடத்தவேண்டும் என்று அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.கிராம சபை பாதுகாப்பான பொது […]