உத்திர பிரதேசத்தில் கழிவறையில் சுருண்டு கிடந்த கட்டு விரியனை பார்த்து பீதியடைந்து வனத்துறையினரை அழைத்த குடும்பத்தினர். உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள ஆக்ராவிலுள்ள சஸ்திரபுரம் எனும் காலனியில் உள்ள ஒரு வீட்டின் கழிவறையில் கொடிய விஷமுள்ள கட்டுவிரியன் பாம்பு சுருண்டு கிடந்தது. இதனை கண்டு பீதியடைந்த குடும்பத்தினர் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த வனத்துறையினர் கிட்டத்தட்ட இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பாம்பை கட்டுக்குள் கொண்டுவந்து அது கட்டுவிரியன் பாம்பு என அடையாளம் கண்டுள்ளனர். […]