மேற்கு வங்கத்தில் சிலைகளை கரைக்க சென்ற 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மேற்கு வங்கத்தில் உள்ள முர்ஷிதாபாத்தில் துர்கா சிலைகளை கரைக்க திங்கட்கிழமையன்று இரண்டு படகுகள் சென்றது .சிலைகளை கரைக்க தலா 10 பேரை ஏற்ற சென்ற அந்த இரண்டு படகுகளும் மாலை 5.15 மணியளவில் ஆற்றில் கவிழ்ந்துள்ளது. படகு கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த ஐவரின் உடல்களும் நீரிலிருந்து வெளியேற்றப்பட்டது.