மேட்டூர் அணையில் அதிகரிக்கும் நீர்வரத்து : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
சேலம் : மேட்டூர் அணையில் இருந்து அதிகளவு உபரி நீர் வெளியேற்றப்படுவதால், காவிரி ஆற்றின் கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழையின் தீவிரம் மற்றும் கர்நாடக அணைகளில் இருந்து (கபினி, கிருஷ்ணராஜசாகர்) உபரி நீர் வெளியேற்றப்படுவதால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது, அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 21,514 கன அடியாக உயர்ந்துள்ளது, மேலும் 60,000 கன அடி வரை நீர் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளது. மேட்டூர் அணை 2025 ஆம் ஆண்டில் நான்காவது […]