மடப்புரம் அஜித் சகோதரர் நவீன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி! என்ன காரணம்?
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டு, தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், அஜித்துடன் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரது சகோதரர் நவீன்குமார், காவலர்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஜூலை 6, 2025 அன்று, கால் பாதங்களில் ஏற்பட்ட கடுமையான வலி காரணமாக நவீன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் […]