Tag: Food

5 நாட்கள் நாய் உணவை சாப்பிட்டால் ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும்..! ஆம்னி நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு..!

5 நாட்கள் நாய் உணவை சாப்பிட்டால் ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என நாய் உணவு தயாரிக்கும் ஆம்னி நிறுவனம் அறிவித்துள்ளது.  இன்று அதிகமானோர் வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்க்கப்படுவதுண்டு. அந்த செல்லப்பிராணிகளுக்கு என விதவிதமான உணவுகள் தயாரிக்கப்பட்டு விற்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாய்களுக்கு உணவு தயாரிக்கும் ஆம்னி என்ற ஒரு நிறுவனம் காய்கறிகள், பழங்கள் கொண்டு தூய்மையான முறையில் மனிதர்களும் சாப்பிடும் வகையில் எந்த ஒரு கெமிக்கல் சேர்க்காமல்  உணவு தயாரிக்கின்றனர். இந்த நிலையில் நிறுவனம் […]

dog 5 Min Read
Default Image

30 வருடங்களாக கழிவறையில் உணவு தயாரிப்பு…! அதிரடியான நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்..!

சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் உள்ள உணவகம் ஒன்றில் கடந்த 30 ஆண்டுகளாக கழிவறையில் உணவு தயாரிக்கப்பட்டு வந்ததையடுத்து, உணவகத்தை மூடுமாறு அதிகாரிகள் உத்தரவு. சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் உள்ள உணவகம் ஒன்றில் கடந்த 30 ஆண்டுகளாக கழிவறையில் உணவு தயாரிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த உணவகத்தில் சமோசா உள்ளிட்ட பிற உணவுகளில் கழிவறையில் தயாரிக்கப்பட்ட செய்தி நகராட்சி அதிகாரிகள் ரகசியமாக கிடைத்ததையடுத்து, அவர்கள் உணவகத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது உணவகத்தின் குளியலறையில் கடந்த 30 ஆண்டுகளாக […]

Food 3 Min Read
Default Image

#BREAKING: பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர் விடுதி – உணவு பட்டியலில் தோசை, இடியாப்பம் சேர்ப்பு!

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர் விடுதிகளின் உணவு பட்டியலில் தோசை, இடியாப்பம் சேர்ப்பு. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர் விடுதிகளின் உணவு பட்டியலில் தோசை, இடியாப்பம் உள்ளிட்ட உணவு வகைகளை சேர்த்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. உணவு செலவுக்கான மானியத்தில் மாற்றம் இல்லாமல் உணவு வகைகளை மாற்றி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், தோசை, இடியாப்பம் உட்பட புதிய சிற்றுண்டிகளும் சேர்க்கப்பட்டு, தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது. ஏற்கனவே, கிச்சடி, பூரி, இட்லி, பொங்கல் வழங்கப்பட்டு வந்த நிலையில், தோசை […]

#TNGovt 5 Min Read
Default Image

சாப்பிட்ட உடனேயே குளிக்கிறீர்களா? இந்த பிரச்சனை ஏற்படும்..!

சாப்பிட்ட பின் குளிக்க கூடாது என்பது உண்மையா? இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். நமது பரபரப்பான வாழ்க்கையில், சாப்பிடும் போது, ​​அதற்கு சரியான நேரம் ஒதுக்குவதில்லை. நம்மில் பெரும்பாலோர் சாப்பிட்ட பிறகு தூங்குவது அல்லது உணவுக்கு முன்னும் பின்னும் போதுமான தண்ணீர் குடிக்காமல் இருப்பது போன்ற சில தவறுகளை செய்கிறோம். மேலும், சாப்பிட்ட உடனேயே குளிக்கக் கூடாது என்று வீட்டில் பெரியவர்கள் பலமுறை கூறி கேட்டிருப்பீர்கள். உணவு உண்ட பிறகு குளிப்பது நல்லதல்ல என்பது பலருக்குத் தெரியும், […]

#Bath 9 Min Read
Default Image

“வினாவுக்கு விடை கிடைக்கவில்லை” – பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை!

விடுதிகளில் தங்கியுள்ள தொழிலாளர்கள் அனுபவிக்கும் வேதனைகள் எப்போது தீரும்? என்ற வினாவுக்கு விடை கிடைக்கவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார். மனிதர்கள் உண்ணத் தகுதியற்ற உணவு, கால்நடைகளைப் போன்று சிறிய அறையில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் தங்க வேண்டிய அவலம்,நோய்களை பரப்பக்கூடிய கழிவறைகள் போன்றவை தான் தொழிலாளர்களுக்கான விடுதிகளின் அடையாளங்கள் என்றும்,எனவே, தொழிற்சாலை விடுதிகளில் தரமான உணவு,அடிப்படை வசதிகளை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை […]

#PMK 13 Min Read
Default Image

அம்மா உணவகங்களில் இன்று முதல் இலவச உணவு நிறுத்தம்.!

அம்மா உணவகங்களில் இன்று முதல் மீண்டும் மலிவு விலையில் உணவு விற்பனை என்று மாநகராட்சி அறிவிப்பு. சென்னை அம்மா உணவகங்களில் இன்று முதல் வழக்கம்போல் உணவுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. மழை, வெள்ள பாதிப்பு காரணமாக சென்னையில் அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்கப்பட்டு வந்தது. மழைக்காலத்தையொட்டி விலையில்லா உணவு வழங்கப்பட்ட நிலையில், தற்போது சென்னையில் மழை, வெள்ள பாதிப்புகள் குறைந்ததால் பழைய முறையில் அம்மா உணவகங்களில் இன்று முதல் உணவுக்கு கட்டணம் […]

amma unavagam 3 Min Read
Default Image

வடகொரியாவில் உணவு பஞ்சம் : 2025 வரை குறைவாக உண்ண உத்தரவு!

வடகொரியாவில் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளதால், 2025 வரை குறைவாக உணவு உண்ண வேண்டும் என அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவல் காரணமாக வட கொரியா நாடு பிற நாடுகளுடன் எல்லைக்கு சீல் வைத்து கொண்டது. மேலும், உணவுப் பொருட்கள் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக சார்ந்திருந்த சீன எல்லையையும் வடகொரியா மூடியது. இதனால் வட கொரியாவில் உணவுப் பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக ஒரு கிலோ வாழைப்பழம் இந்திய மதிப்பில் 3,300 […]

Food 3 Min Read
Default Image

போதிய உணவின்றி ஆப்கானிஸ்தானில் 1 கோடி குழந்தைகள் தவிப்பு…!

ஆப்கானிஸ்தானில் போதிய உணவின்றி 1 கோடி குழந்தைகள் தவித்து வருவதாக யுனிசெப் அமைப்பு அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது.  ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், அந்நாட்டை சேர்ந்த மக்கள் மற்றும் நாட்டிலிருந்த பிற நாட்டை சேர்ந்த மக்கள் அனைவரும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியுள்ளனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் இருக்கக்கூடிய ஒரு கோடிக்கும் அதிகமான குழந்தைகள் போதிய அளவு உணவு, மருந்து மற்றும் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் இன்றி தவித்து வருவதாக யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. இது […]

#Afghanistan 3 Min Read
Default Image

ஹோட்டலில் பிரியாணி சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழப்பு..!29 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

திருவண்ணாமலையில் உள்ள ஹோட்டலில் பிரியாணி சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள ஒரு ஹோட்டலில் பிரியாணி உட்கொண்ட 10 வயது சிறுமி இறந்துள்ளார், மேலும் 29 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆரணி பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலுள்ள 7 நட்சத்திர ஹோட்டலில் உணவு உட்கொண்டவர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் போன்ற அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளது. ஆனந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் அந்த ஹோட்டலில் […]

10-year-old dies 4 Min Read
Default Image

கோவையில் போராடும் அதிமுகவினரின் பசியை போக்க உப்புமா, தக்காளி சோறு…!

கோவையில் போராடும் அதிமுகவினரின் பசியை போக்க உப்புமா, தக்காளி சோறு. அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி அவர்கள், அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது அரசு ஒப்பந்தம் பெற்றுத் தருவதாக ரூ 1.20 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவரது வீட்டில் 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் காலை 6 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இவருக்கு சொந்தமான 55 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. […]

#ADMK 2 Min Read
Default Image

அங்கன்வாடிகளை திறக்க ஆலோசிக்க வேண்டும்..! தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை…!

கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து அறிவியல் பூர்வமாக ஆலோசனைகளை மேற்கொண்டு ஆய்வு செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுவாக பள்ளிகளில் இயங்கிய காலகட்டங்களில் ஏழை, எளிய மாணவர்கள் உணவை குறித்து கவலைப்படுவதில்லை என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் தங்களது வயிற்றுப் பசியை ஆற்றிக் கொள்வதற்காக பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளில் சத்துணவு அளிக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் தற்போது கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், […]

chennai HC 6 Min Read
Default Image

குட்டையா இருக்கிறோமேனு கவலைப்படாதீங்க….! உங்களுக்காக தான் இந்த டிப்ஸ்…!

உயரமாக வளர வேண்டும் என விரும்புபவர்கள் கீழ்கண்ட உணவுகளை உட்கொள்ள வேண்டும்.  இன்று அதிகமானோர் தங்கள்  உயரத்தை குறித்து கவலைப்படுவதுண்டு. ஒருவரின் உடல் தோற்றத்திற்கேற்றவாறு, அவர்களது உயரம் இருக்க வேண்டியது அவசியமானதாகும். உடற்பயிற்சி மற்றும் புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவைப் உட்கொள்வது நாம் உயரமாக வளர உதவுகிறது. அதுமட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. பொதுவாக ஒரு நபரின் உயரம் 18 வயது முதல் 20 வயது வரை அதிகரிக்கும். அந்த […]

Food 5 Min Read
Default Image

மாணவர்களின் வீடுகளுக்கே சென்று சத்துணவு வழங்கும் திட்டம்…! அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…!

மாணவர்களின் வீடுகளுக்கே சென்று சத்துணவு வழங்கும் வகையில் திட்டம் வகுக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.  சென்னை உயர்நீதிமன்றத்தில், சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்‌ஷன் குரூப் என்ற அமைப்பின் சார்பில், ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், 2020-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக இதுவரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சமைக்கப்பட்ட உணவு வழங்கப்படவில்லை. அதற்கு பதிலாக மாணவர்களின் பள்ளிகள் மூலம் சமைக்கப்படாத உணவுப் பொருட்கள் 15 நாட்களுக்கு […]

chennai high cort 4 Min Read
Default Image

viral video: பசியின் கொடுமையால் வீட்டின் சுவரை உடைத்து உணவை எடுத்துக்கொண்ட யானை..!

தாய்லாந்தில் பசியின் கொடுமையால் ஒரு வீட்டின் சுவரை உடைத்து கொண்டு யானை ஒன்று உணவை எடுத்துக்கொண்ட காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. தாய்லாந்தில் ஹுவாஹின் பகுதியை சேர்ந்த ஒரு  யானை சுவர் உடைத்து வந்து உணவை உண்டுள்ளது. இந்த பகுதியில் இருந்த வீட்டின் பின் பக்க சுவர் ஒன்றை யானை உடைத்துள்ளது. இந்த சம்பவம் அதிகாலையில் 2 மணிக்கு நடந்துள்ளது. வீட்டின் சுவர் உடைந்த சத்தம் கேட்டு வீட்டில் இருந்த தம்பதியினர் சென்று பார்த்துள்ளனர். அப்போது யானை […]

broke house 3 Min Read
Default Image

ஒரு வயது உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் கொடுக்க கூடாத 5 உணவுகள்….!

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் போது கவனமாக கொடுக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். ஒரு வயது வரை குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாத 5 உணவுகள். பெற்றோர்களை பொருத்தவரையில் தங்களது குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அதிகமாக முக்கியத்துவம் செலுத்துவது உண்டு. அந்த வகையில் பிறந்த குழந்தை முதல் ஒரு வயது குழந்தை வரை அவர்களது உணவு பழக்க வழக்கங்களில் சில கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும். ஒரு வயது வரை குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் போது கவனமாக கொடுக்க வேண்டியது […]

babyhealth 6 Min Read
Default Image

ஆர்டர் பன்னது சிக்கன்…வந்ததோ நல்லா வறுத்த டவள்…அதிர்ச்சியில் ஆர்டர் செய்த பெண்!

பிலிப்பைன்ஸில் பெண் ஒருவர் ஆன்லைனில் சிக்கன் ஆர்டர் செய்ததில் டவள் வந்ததால் அதிர்ச்சி. பிலிப்பைன்ஸில் பெண் ஒருவர் ஆன்லைன் மூலமாக வறுத்த சிக்கன் ஆர்டர் செய்தபோது சிக்கனுக்கு பதிலாக டவள்(துண்டு) வந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளார். ஜொல்லிபீ என்பது பிலிப்பைன்ஸ் ஜொல்லிபீ ஃபுட்ஸ் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான ஃபாஸ்ட் ஃபுட் உணவகங்களில் ஒன்று, ஜொல்லிபீ உணவகம் வறுத்த கோழி விற்பனையில் பிரபலமானது. அலிக் பெரெஸ் என்ற பெண் தனது மகனுக்காக செவ்வாயன்று பிலிப்பைன்ஸில் உள்ள ஜொல்லிபியில் ஃப்ரைட் சிக்கன் ஆர்டர் […]

Food 5 Min Read
Default Image

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு 3 வேளை உணவு…! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்…..!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில்  தனிமைப்படுத்தப்பட்டிருப்பவர்களுக்கு 3 வேளை உணவு வழங்கும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன் தொடங்கி வைத்துள்ளார்.  தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும், மே-24ம் தேதி முதல் 31ம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், லேசான கொரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் தங்களது வீட்டிலேயே […]

Food 3 Min Read
Default Image

ஊரடங்கு காலத்திலும் பாலியல் தொழிலாளர்கள் மற்றும் போலிஸாருக்கு இலவச உணவு வழங்கும் பெண்…!

ஊரடங்கு காலத்திலும் பாலியல் தொழிலாளர்கள் மற்றும் போலிஸாருக்கு இலவச உணவு வழங்கும் பெண்.  இந்தியா முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பல மாநிலங்களில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து பலரும் உணவிற்கே வழியின்றி தவித்து வருகின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு பலர் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர். அந்த வகையில், புனேவில் அகன்ஷா சடேகர் என்ற பெண் தினசரி 7,000 பேருக்கு உணவுகளை இலவசமாய் வழங்கி […]

akansha 7 Min Read
Default Image

“பிணி நீக்கும் போர்க்களத்தில் பசி போக்கும் பணியில் திமுகவினர் ஈடுபட வேண்டும்” – முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்..!

“பிணி நீக்கும் போர்க்களத்தில் பசி போக்கும் பணியில் திமுகவினர் ஈடுபட வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையானது தீவிரமடைந்துள்ள நிலையில்,நாளை முதல் மே 31-ஆம் தேதி வரை தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து,தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு இருந்தாலும்,கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளில் எந்த தொய்வும் ஏற்படக் கூடாது என்றும்,கொரோனா நிவாரண நிதியை அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் பெற்றுக் கொண்டனர் என்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிசெய்ய வேண்டும் […]

#DMK 4 Min Read
Default Image

கேரளாவில் முழு ஊரடங்கு…! அனைவருக்கும் இலவச உணவு….! – முதல்வர் பினராயி விஜயன்

கேரளாவில் முழு ஊரடங்கு நாட்களில், அனைத்து குடும்பங்களுக்கும் மற்றும் பணியாளர்களுக்கும் இலவசமாக உணவு வழங்கப்படும்.  இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து ஒவ்வொரு மாநிலங்களிலும் அம்மாநில அரசுகள் பல புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளது. இந்நிலையில் கேரளாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வரும் நிலையில், இன்று முதல் […]

#Kerala 4 Min Read
Default Image