சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார். அங்குள்ள உணவுகளை சுவைத்தும், அங்கு சாப்பிட வந்தவர்களிடம் உணவின் தரம் பற்றி விசாரித்தும் ஆய்வு செய்தார். இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, முதல்வரின் ஆய்வு மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்து விமர்சித்து இருந்தார். இது குறித்து அவர் கூறியிருந்ததாவது “முதலமைச்சர் ஆய்வுக்கு வருவார் என்று முன்னதாகவே அம்மா உணவகத்திற்கு தெரிவிக்கப்பட்டு அங்கு தரமாக உணவுப் பொருட்கள் […]
சென்னை: அம்மா உணவகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சன அறிக்கைகையும், ஓர் வீடீயோவையும் வெளியிட்டுள்ளார். நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார். அங்குள்ள உணவுகளை சுவைத்தும், அங்கு சாப்பிட வந்தவர்களிடம் உணவின் தரம் பற்றி விசாரித்தும் ஆய்வு செய்தார். பின்னர் அங்குள்ள பொருட்களின் இருப்பு பற்றியும் கேட்டறிந்தார். பின்னர் சென்னை மாநகராட்சியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களை […]
சென்னை: கடந்த 2013இல் அதிமுக ஆட்சிக்காலத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் கொண்டுவரப்பட்ட திட்டம் அம்மா உணவகம். இதன் மூலம் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் குறைந்த விலையில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் , அதிமுக ஆட்சியை தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் திமுக ஆட்சிக்காலத்திலும் அதே பெயரில் பெரும்பாலும் அனைத்து இடங்களிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலகத்தில் தனது அலுவல் பணிகள், நலத்திட்ட பணிகளை […]
சென்னை: அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டு 11 ஆண்டுகள் ஆன நிலையில், முதல் முறையாக அம்மா உணவகங்களை மேம்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது, சென்னையில் அம்மா உணவக ஊழியர்களுக்கு தினக்கூலி ஊதியத்தை உயர்த்தி வழங்க சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, பணியாளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் ஊதியத்திலிருந்து ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளுக்குப் பிறகு அம்மா உணவக ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் அம்மா […]
சென்னை:அம்மா உணவகம் மூடப்படாது என்றும்,பயிர் பாதிப்பிற்கு ரூ.132 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உறுதி அளித்துள்ளார். தமிழக சட்டபேரவை கூட்டத்தொடரின் 3 வது மற்றும் கடைசி நாள் கூட்டமானது சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது.அதன்படி,இன்று காலை தொடங்கிய பேரவை கூட்டத்தில் அதிமுக ஆட்சியில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கூட்டுறவு சங்கங்கள் தேர்தலை ரத்து செய்வதற்கான மசோதாவை பேரவையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்தார். ஆனால்,சட்டப்பேரவையில் கூட்டுறவு […]
அம்மா உணவக பணியாளர்களை பணியிலிருந்து நீக்க முயற்சிப்பதும், மிரட்டுவதும் கடும் கண்டனத்திற்குரியது என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். மக்களுக்கு நம்பிக்கையுள்ள ஆட்சியாக தி.மு.க. ஆட்சி இல்லை என்பதுதான் பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளதாகவும்,மேலும்,அம்மா உணவகங்களில் பணியாற்றும் ஏழை, எளியத் தொழிலாளர்கள் தொடர்ந்து பணியாற்றிட முதல்வர் வழிவகை செய்திட வேண்டும் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக,வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: நம்பிக்கையுள்ள ஆட்சியாக தி.மு.க. ஆட்சி இல்லை: “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தங்களுக்குத் தாங்களே நம்பிக்கை உள்ளவர்களாக நடந்துகொண்டால் […]
‘அம்மா உணவகம்’ என்று நடைமுறையில் இருக்கின்ற ஒரு திட்டத்தை அந்தப் பெயரிலேயே விரிவுபடுத்தாமல் புதிதாக அதற்கு ‘கலைஞர் உணவகம்’ என்று பெயர் வைப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதாக உள்ளது என்று ஓபிஎஸ் குற்றச்சாட்டு. வருங்காலத்தில் 500 சமுதாய உணவகங்கள் “கலைஞர் உணவகம்” என்ற பெயரில் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் சக்கரபாணி அவர்கள் நேற்று கூறியது, “அம்மா உணவகம்” என்ற பெயரை இருட்டடிப்பு செய்யும் நோக்கம் கொண்டதாக, அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டதாக உள்ளது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் […]
அம்மா உணவகங்களில் இன்று முதல் மீண்டும் மலிவு விலையில் உணவு விற்பனை என்று மாநகராட்சி அறிவிப்பு. சென்னை அம்மா உணவகங்களில் இன்று முதல் வழக்கம்போல் உணவுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. மழை, வெள்ள பாதிப்பு காரணமாக சென்னையில் அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்கப்பட்டு வந்தது. மழைக்காலத்தையொட்டி விலையில்லா உணவு வழங்கப்பட்ட நிலையில், தற்போது சென்னையில் மழை, வெள்ள பாதிப்புகள் குறைந்ததால் பழைய முறையில் அம்மா உணவகங்களில் இன்று முதல் உணவுக்கு கட்டணம் […]
முழு ஊரடங்கின்போது அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்பட தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றானது அதிவேகமாகப் பரவி வருகிறது.இதனால்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றன.இதன்காரணமாக,பல மாநிலங்கள் தற்போது முழு ஊரடங்கை அறிவித்து வருகின்றன. இந்நிலையில்,தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பின் காரணமாக வருகின்ற மே 10 முதல் மே 24 வரை முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. முழு ஊரடங்கின் போது அனைத்துதனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள், ஐ.டி.நிறுவனங்கள்,பூங்காங்கள், அருங்காட்சியகங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.எனினும், […]
அம்மா உணவக பெயர் பலகையை எடுத்த 2 பேர் திமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர். சென்னையில் உள்ள ஒரு அம்மா உணவகத்தில் திமுகவை சேர்ந்த 2 பேர் அம்மா உணவகத்தின் பெயர் பலகைகளை கிழித்ததும், உணவகத்தையும் சூறையாடினர். அம்மா உணவகத்தை திமுகவை சேர்ந்த இருவர் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த வீடியோவை தொடர்ந்து பலர் அம்மா உணவகத்தை சூறையாடியதற்கு தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, அம்மா உணவக பெயர் பலகையை எடுத்த 2 பேர் […]
ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு முன்பே அராஜகத்தை ஆரம்பித்துவிட்ட தி.மு.க.வினர் அடுத்தடுத்து என்ன செய்யப் போகிறார்களோ? என தினகரன் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள ஒரு அம்மா உணவகத்தில் திமுகவை சேர்ந்த இருவர் அம்மா உணவகத்தின் பெயர் பலகைகளை பிடுங்கி, நடுரோட்டில் எறிந்து உடைத்து போட்டனர். பின்னர் இனி அம்மா உணவகம் என்ற பெயரெல்லாம் கிடையாது என கூறியபடி சென்றனர். அம்மா உணவகத்தை திமுகவை சேர்ந்த இருவர் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி […]
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் இன்று முதல் ஜூன் 30 வரை அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வரும் இன்று முதல் வருகின்ற 30 தேதி வரை அதாவது 12 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்நிலையில், ஊரடங்கு பிற்பிக்கப்பட்ட பகுதிகளில் […]
ஊரடங்கு முடியும் வரை சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்க இருப்பதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஊரடங்கு மே 31-ம் தேதி வரை நீடிக்கப்படுகிறது என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார். பொதுமுடக்கம் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் வாடும் மக்களுக்காக பல்வேறு தரப்பினர் உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றன. மேலும், வறுமையில் வாடும் மக்களுக்கு சில மாவட்டங்களில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், […]
ஊரடங்கு முடியும் வரை சென்னை மாநகராட்சியில் உள்ள 407 அம்மா உணவகங்களிலும் இலவசமாக உணவு வழங்கப்படும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தமிழக அரசும் இந்த வைரசுக்கு எதிராக, இதனை தடுக்கும் வகையில், பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஊரடங்கு முடியும் வரை சென்னை மாநகராட்சியில் உள்ள 407 அம்மா உணவகங்களிலும் இலவசமாக உணவு […]
அம்மா உணவகங்களை வைத்து அரசியல் செய்யாமல் அரசே இலவச உணவுகள் வழங்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் இன்று மேலும் 76 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1596 ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஊரடங்கு காலத்தில் அம்மா உணவகங்களை வைத்து அரசியல் செய்யாமல் அரசே இலவச உணவுகள் வழங்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் செய்தியாளர்களுக்கு கொரோனா வந்திருப்பது […]
சேலம் மாநகராட்சியில் நாளை முதல் அம்மா உணவகங்களில் காலை, மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். சேலம் மாநகராட்சியில் நாளை முதல் அம்மா உணவகங்களில் காலை, மதிய உணவு இலவசமாக வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த உணவுக்கான செலவை சேலம் மாநகர், புறநகர் மாவட்ட அதிமுக ஏற்கும் என தெரிவித்துள்ளார். மேலும் மாநகராட்சி, ஆட்சியர் அலுவலகம் மற்றும் அரசு மருத்துவமனையில் வேலை செய்து வரும் தூய்மை பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும், 10 கிலோ அரிசி மற்றும் […]
சீனாவை தொடர்ந்து பல நாடுகளில் கொரோனா வைரஸ் நோயானது பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது இதன் பாதிப்பு இந்தியாவிலும் பரவி வருகிற நிலையில், இதனை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்திய அரசு ஏற்படுத்தி வருகிறது. இதனையடுத்து, இந்திய அரசு 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் வெளி மாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல இயலாமல் தவித்து வருகின்றனர். ரேஷன் கார்டு இல்லாமல், உணவிற்கு பணமின்றி தவிக்கும் வெளி மாநில தொழிலாளர்கள், பெயர் மற்றும் […]