நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், செப்டம்பர் மாதம் முதல் குறிப்பிட்ட தூரத்திற்கு ரயில்களில் இலவச பயணத்தை ஸ்பெயின் அரசு அறிவித்துள்ளது. இது சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகளுக்கு முற்றிலும் இலவசம். ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், நெட்வொர்க்கின் பொது சேவைகளான செர்கானியாஸ், ரோடலிஸ் மற்றும் மீடியா டிஸ்டன்ஸ் மூலம் இயக்கப்படும் ரயில்களுக்கான உள்ளூர் மற்றும் நடுத்தர தூர பயண டிக்கெட்டுகள் செப்டம்பர் 1 முதல் ஆண்டு இறுதி வரை இலவசமாக இருக்கும் என்று கூறினார். ஆண்டின் இறுதியில் […]