கன்னியாகுமரி தொகுதி எம்.பியும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராக இருந்த H.வசந்தகுமார் கடந்த 10-ம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டதால் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிக்சை பெற்றுவந்த நிலையில், சற்று நேரத்திற்கு முன் சிகிக்சை பலனின்றி H.வசந்தகுமார் காலமானார். H.வசந்தகுமார் மறைவிற்கு பல தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் வசந்தகுமார் புகைப்படத்தை பதிவிட்டு இரங்கலை தெரிவித்துள்ளது. அதில், எச். வசந்தகுமாரின் அகால மரணத்தால் நாங்கள் […]