Jammu Kashmir : ஜம்மு காஷ்மீரில் இடைவிடாது பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுக்க பெரும்பாலான பகுதிகளில் கோடை வெயில் மக்களை வட்டி வதைக்கும் சமயத்தில், ஜம்மு காஷ்மீரில் கனமழை வெள்ளத்தால் அங்குள்ள மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக ஜம்மு காஷ்மீரில் பெய்து வரும் கனமழை மேலும் தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக, ஜீலம் நதியின் துணை நதியான […]