ஜாக்டோ -ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் க.மீனாட்சி சுந்தரம் உடல்நிலைக்குறைவால் காலமானார். ஜாக்டோ -ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் க.மீனாட்சி சுந்தரம் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்தார். இந்நிலையில், உடல்நலக்குறைவுக் காரணமாக சிகிக்சை பெற்று வந்த க.மீனாட்சி சுந்தரம் காலமானார். இவர் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றபொதுச் செயலாளராக இருந்துள்ளார். மேலும் தமிழ்நாடு சட்டமன்ற மேலவையில் ஆசிரியர் சங்க பிரதிநிதியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.