லூபிட் எனும் சக்திவாய்ந்த புயல் ஜப்பானை கடுமையாகத் தாக்கும் என கூறப்பட்டுள்ளது. சீனா மற்றும் தைவானில் பெரும் சேதங்களை ஏற்படுத்திய லூபிட் எனும் சக்தி வாய்ந்த புயல், தற்போது ஜப்பானின் தெற்கு மற்றும் தென் மேற்கு பிராந்தியங்களை கடுமையாக தாக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த புயல் கரையை கடக்கும் பொழுது 82 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும், கடல் கொந்தளிப்புடன் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது . மேலும் ஜப்பானின் ஹிரோஷிமா, ஷிமனே மற்றும் எஹிம் […]