“எதிர்ல வரது எமனாய் இருந்தா கூட பயப்படக் கூடாது” என விஜய் சேதுபதி பேசும் வசனத்துடன் மாஸ்டர் திரைப்படத்தின் 5வது ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் இம்மாதம் 13 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், தினமும் ஒரு ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ மூலம் ரசிகர்களுக்கு படம் குறித்து அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. இதுவரை 4 ப்ரோமோக்கள் வெளியான […]