"எதிர்ல வரது எமனாய் இருந்தா கூட பயப்படக் கூடாது"- மிரட்டும் மாஸ்டர் படத்தின் 5-ஆம் ப்ரோமோ!

The film crew has released 5th promo of the master movie that "Edhirla varadhu emanaa irundhaalum bayapuda kudaadhu"

“எதிர்ல வரது எமனாய் இருந்தா கூட பயப்படக் கூடாது” என விஜய் சேதுபதி பேசும் வசனத்துடன் மாஸ்டர் திரைப்படத்தின் 5வது ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் இம்மாதம் 13 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், தினமும் ஒரு ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ மூலம் ரசிகர்களுக்கு படம் குறித்து அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.

இதுவரை 4 ப்ரோமோக்கள் வெளியான நிலையில், அதில் விஜய் பேசிய ப்ரோமோ, ரசிகர்களுக்கு விருந்தாய் அமைந்தது. இந்தநிலையில், தற்பொழுது மாஸ்டர் படத்தின் 5-ஆம் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் விஜய் சேதுபதி மிரட்டலாக“எதிர்ல வரது எமனாய் இருந்தா கூட பயப்படக் கூடாது”என்ற வசனத்தை பேசி, விஜயுடன் சண்டைக்கு தயாராவது போல அமைந்துள்ளது. இதனை பார்க்கும்போது விஜய்க்கும், விஜய் சேதுபதிக்கும் பெரிய சண்டை நடக்கும் என ரசிகர்களிடையே எதிர்பார்க்கப்படுகிறது.

unknown node