காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்துடனான துப்பாக்கிசூட்டின் போது காயமடைந்த தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் வீரமரணம் அடைந்துள்ளார். காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தின் சந்தெர்பானி எல்லைப்பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் ராணுவம் நேற்று துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. அதற்கு, இந்திய தரப்பில் இருந்து தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. சில மணி நேரம் நீடித்த இந்த துப்பாக்கிச்சூட்டில் ஹவில்தார் மதியழகன் படுகாயம் அடைந்தார். இதையடுத்து, ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மதியழகன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். வீரமரணம் அடைந்த ஹவில்தார் […]