மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராகவும், ஆங் சான் சூகியை விடுவிக்குமாறும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்த போராட்டத்தை முடக்கும் விதமாக நள்ளிரவில் நாடு முழுவதும் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் மோசடி நடந்ததாகக் குற்றம் சாட்டி ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக ரீதியிலான ஆட்சியைக் கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை மியான்மர் ராணுவம் கைப்பற்றியதுடன், நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் […]