திரிபுரா பாஜக எம்எல்ஏ அருண் சந்திர பௌமிக்,திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் மீது “தலிபான்கள் பாணியில் தாக்குதல்” நடத்துமாறு தனது ஆதரவாளர்களிடம் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும்,பாஜகவிற்கும் இடையே நீண்ட நாட்களாக மோதல் நீடித்து வருகிறது.இதற்கிடையில்,முதல்வர் மம்தா, பாஜகவினர் ஆளும் திரிபுராவில் ஆட்சியைப் பிடிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்,மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் பிரதிமா பவுமிக்கிற்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் பேசிய திரிபுரா மாநில பாஜக […]