யூடியூப் வீடியோ பார்த்து உடல் எடையை குறைக்க முயன்ற சிறுவன் உயிரிழப்பு.!

உடல் எடையைக் குறைக்க யூடியூப் பார்த்து பழங்களை மட்டுமே சாப்பிட்டு வந்த 12ம் வகுப்பு மாணவர் சக்தீஸ்வர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.

Diet

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவன் ஒருவன், உடல் எடையை குறைப்பதற்காக யூடியூப் வீடியோக்களைப் பார்த்து, முறையற்ற உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி முறைகளைப் பின்பற்றியதால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த மூன்று மாதங்களாக உணவு உட்கொள்ளாமல், பழச்சாறு மட்டுமே குடித்து உடற்பயிற்சி செய்து வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது அவரது உடல்நிலையை மோசமாக்கி, உயிரிழப்புக்கு வழிவகுத்துள்ளது. மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள், உடல் எடையைக் குறைப்பதற்கு முறையான மருத்துவ ஆலோசனையின் கீழ் உணவு மற்றும் உடற்பயிற்சி திட்டங்களைப் பின்பற்ற வேண்டும் என எச்சரிக்கின்றனர்.

யூடியூப் போன்ற தளங்களில் கிடைக்கும் தகவல்கள் அனைத்தும் நம்பகமானவை அல்ல, மேலும் தவறான முறைகள் உடல் நலத்திற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தலாம். இதேபோன்ற மற்றொரு சம்பவத்தில், கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது மாணவி ஸ்ரீநந்தா, உடல் எடையைக் குறைக்க யூடியூப் வீடியோக்களைப் பின்பற்றி, கடுமையான உணவுக் கட்டுப்பாட்டால் அனோரெக்ஸியா நெர்வோசா (Anorexia Nervosa) என்ற உணவுக் கோளாறுக்கு ஆளாகி, உயிரிழந்தார்.

இவர் கடந்த ஆறு மாதங்களாக உணவு உட்கொள்வதை குறைத்து, கடைசி இரண்டு மாதங்களாக தண்ணீர் மட்டுமே உட்கொண்டு வந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால், ஒவ்வொருவரும் தங்களின் உடல்நிலை, வயதுக்கு ஏற்ற டயட் திட்டத்தை, டாக்டரிடம் ஆலோசனை பெற்றுதான் பின்பற்றினால் நல்லது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்