சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், மக்களுடன் கலந்துரையாடவும், திட்டங்களைத் தொடங்கி வைக்கவும் பல்வேறு மாவட்டங்களுக்கு அடிக்கடி பயணம் மேற்கொள்கிறார். அதன் ஒரு பகுதியாக நாளை (ஜூலை 22) மற்றும் ஜூலை 23 தேதிகளில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். நாளை காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு வருகிறார். அங்கு அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவையில் 15 வேலம்பாளையத்தில் புதிய மருத்துவமனை […]