அயோத்தியில் புதியதாக கட்டப்பட உள்ள பாபர் மசூதியின் மாதிரி புகைப்படத்தை இந்திய இஸ்லாமிய கலச்சார அமைப்பு வெளியிட்டுள்ளது. அயோத்தியில் பாபர் மசூதி அமைந்திருந்த இடம் யாருக்கு சொந்தமானது என்பதை குறித்து உச்சநீதிமன்றம் விசாரித்து கடந்த ஆண்டு நவம்பர் 9-ம் தேதி தீர்ப்பளித்தது. சர்ச்சைக்குரியதாக கருதப்பட்ட 2.77 ஏக்கர் நிலத்தை ராம் லல்லாவுக்கு வழங்கி உத்தரவிட்டது. அத்துடன், முஸ்லிம்களுக்கு மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் மாற்று இடம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவைத் தொடர்ந்து […]