தென் கொரியா எதிர்க்கட்சித் தலைவர் லீ ஜே மியுங், இன்று செய்தியளர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென அவரது கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, தென் கொரியாவின் பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் தலைவர் லீ ஜே மியுங், தெற்கு துறைமுக நகரமான புசானின் கதியோக் தீவில் புதிதாக கட்டப்பட்டு வரும் விமான நிலைய பணிகளை மேற்பார்வையிட இன்று காலை அங்கு சென்றுள்ளார். அப்போது, செய்தியாளர்களை சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தபோது, அந்த கூட்டத்தில் இருந்த […]