சென்னை : ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஆரஞ்ச் அலர்ட் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. […]
வானிலை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் மழைபெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி, மயிலாடுதுறை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (ஜூலை 18) தமிழ்நாட்டில் இன்று ஆரஞ்சு அலர்ட் கொடுத்துள்ளது. ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஜூலை 19 உருவாக வாய்ப்புள்ளது.இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று 12 – 20 […]
வானிலை : தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்திருக்கும் நிலையில், பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு வெள்ளம் ஏற்பட்டது. இன்று அங்கு கனமழை பெய்து வரும் நிலையில், இன்று தமிழகத்திற்கு மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று தெற்கு ‘சத்தீஸ்கர்’ மற்றும் அதனை ஒட்டிய […]
Heat wave Alert: வெப்ப அலை காரணமாக தமிழகத்துக்கு அடுத்த 5 நாட்கள் மஞ்சள் எச்சரிக்கை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம். தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக கடுமையான கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதில் குறிப்பாக தமிழகத்தில் இயல்பான அளவைவிட வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சில பகுதிகளில் வெப்பநிலை உட்சபட்சத்தை தொட்டு வெப்ப அலை வீசுகிறது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் […]
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ள காரணத்தால் சென்னை வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் கொடுத்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், […]
தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி,கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், தூத்துக்குடி, நெல்லை மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும் இந்த மூன்றுமாவட்டத்திற்கும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாளை இரண்டு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக […]
நாளை (ஜனவரி 8) செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ள காரணத்தால் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை ஏற்கனவே பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், நாளையும் சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதைப்போல, நாளை திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் […]
தொடர் கன மழை காரணமாக அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி விருதுநகர், மதுரை மற்றும் தேனி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல தூத்துக்குடி, குமரி, திண்டுக்கல், கோவை, திருப்பூர் மற்றும் சிவகங்கை ஆகிய 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ,அரியலூர், பெரம்பலூர், திருச்சி […]
சென்னை, நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு தேசிய மீட்பு குழு வருகை தரவுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து புயலாக மாற வாய்ப்புள்ளதால் டிசம்பர் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. டிச. 7ம் தேதி நள்ளிரவு முதல் கடலோர மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகும் புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரைத்த பெயர் வைக்கப்பட […]
தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுச்சேரிக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக இன்று 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வரும் 5ம் தேதி வரை கனமழை தொடரும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில், தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுச்சேரிக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று […]
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிந்து, வடகிழக்கு பருவமழை நேற்று முன்தினம் தொடங்கி தொடங்கியுள்ள நிலையில், கேரளா, உள்தமிழகம், தெற்கு உள் கர்நாடகா, உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழைபெய்து வருகிறது. இதனால், தமிழகத்தில் ஆங்காங்கே பல்வேறு இடஙக்ளில் மிதமான மழை பெய்து வரும் சூழலில், தற்போது தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று முதல் நவம்பர் 3 வரை தமிழகத்தில் உள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கன […]
தமிழகத்தில் வரும் நவம்பர் 1 மற்றும் 3 ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிந்து, வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. தமிழகத்தில் ஆங்காங்கே பல்வேறு இடஙக்ளில் மிதமான மழை பெய்து வரும் சூழலில் தற்போது தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வரும் நவம்பர் […]
மும்பையில் வெள்ளிக்கிழமை பெய்த கனமழையால் மும்பைவாசிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர் நகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்தேரி, கோரேகான், சாண்டாகுரூஸ், போவாய், கர் போன்ற பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.இந்திய வானிலை ஆய்வு மையம் மகாராஷ்டிராவின் பால்கருக்கு செப்டம்பர் 16 ஆம் தேதி ஆரஞ்சு எச்சரிக்கையை விடுத்துள்ளது. கனமழையால் தானே மாவட்டத்தில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.மேலும், ராய்காட் மற்றும் ரத்னகிரி ஆகிய பகுதிகளும் இன்று வரை உஷார்படுத்தப்பட்டுள்ளன.
ஹைதராபாத் மற்றும் தெலுங்கானாவின் பல பகுதிகளில் நேற்று பெய்த கனமழையால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும், பல இடங்களில் வாகனப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. ஜூப்ளி ஹில்ஸ், பஞ்சாரா ஹில்ஸ், எல்பி நகர், யூசுப்குடா, அமீர்பேட்டை, மல்காஜ்கிரி, மாதப்பூர், மியாபூர், செரிலிங்கம்பள்ளி, சாந்தாநகர், கச்சிபௌலி, பேகம்பேட்டை, செகந்திராபாத், அல்வால், குதுபுல்லாபூர் மற்றும் நகரின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. வரும் சனிக்கிழமை கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு […]
மகாராஷ்டிராவில் கனமழை பெய்து வருவதால் ராய்காட்,, ரத்னகிரி, கோலாப்பூர் மற்றும் சிந்துதுர்க் போன்ற பகுதிகளுக்கு ஜூலை 9-ஆம் தேதி வரை இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விதித்துள்ளது. அதுமட்டுமின்றி, பால்கர், புனே மற்றும் சதாரா ஆகிய பகுதிகளுக்கு ஜூலை 8 வரை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மும்பை செய்தி நிறுவனம் ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது. மேலும் தானே மற்றும் மும்பைக்கு ஜூலை 10 வரை ஆரஞ்சு எச்சரிக்கை விடுவிடுக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் வியாழக்கிழமை அன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுத்துள்ளது. வியாழக்கிழமையன்று வழக்கத்தை விட வெப்பநிலையில் மாற்றம் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அதாவது மூன்று முதல் நான்கு டிகிரி வரை குறைந்து மிதமான வெப்பநிலை காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஐஎம்டியின் ஏழு நாள் கணிப்பின்படி, ஜூலை 11 வரை ஒவ்வொரு நாளும் மழைப்பொழிவு நடவடிக்கைக்காக டெல்லியில் ‘மஞ்சள்’ எச்சரிக்கை உள்ளது என ஐஎம்டி விஞ்ஞானி ஆர்.கே.ஜெனமணி கூறினார்.
தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிக கனமழை நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. சென்னையில் ஏற்கனவே 8 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்து வரும் நிலையில், மிகக் கனமழைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் பெய்து […]
டெல்டா மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் அப்பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. டெல்டா மற்றும் கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, சேலம், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதுடன், 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடலோரப் பகுதி மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடித்து வருவதால் கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கன மழை பெய்ய […]
தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்படுகிறது என்று இந்திய வானிலை மையம் அறிவிப்பு. குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தீவிரமடைந்து வருவதால் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்படுகிறது என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல், அதை ஒட்டிய இலங்கை கடலோர பகுதியில் குறைந்த காற்றுழத்த தாழ்வு பகுதி நிலவுகிறது என்று தெரிவித்துள்ளது. குறைந்த காற்றுழத்த தாழ்வு பகுதி தமிழ்நாட்டின் கரையை நோக்கி நகர்வதால் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை […]