சென்னை :கனமழை முன்னெச்சரிக்கையாக தமிழகத்தின் பல பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதன்படி, மாற்று தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, கனம ழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பல்கலைக்கழகத் தேர்வுகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று நடைபெற இருந்த சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் கனமழை காரணமாக ஒத்திக்கப்பட்டுள்ளது. மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என சென்னை பல்கலைகலக்கம் அறிவித்துள்ளது.
முன்னதாக, கனமழை எதிரொலியாக, திருச்சி பாரதிதாசன் மற்றும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகங்களில் இளநிலை, முதுநிலை பருவ எழுத்து தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும், தேர்வுக்கான மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அழகப்பா பல்கலைக்கழக தேர்வு ஒத்திவைப்பு
மேலும், கனமழை காரணமாக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக இணைவு கல்லூரிகளிள் இன்று நடக்க இருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேர்முகத் தேர்வு ஒத்திவைப்பு
அதேபோல், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை நடைபெறவிருந்த கூட்டுறவு சங்க விற்பனையாளர், கட்டுநர் பணிக்கான நேர்முகத் தேர்வு, டிச.4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
