பாகிஸ்தான் : பலுசிஸ்தான் மாகாணத்தில் தீவிரவாதிகள், தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்து அதில் குறிப்பிட்ட நபர்களை சுட்டுக்கொன்றனர். இதில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான், பலுசிஸ்தான் மாகாணத்தில், சில தீவிரவாத அமைப்புகள் செயல்ப்பட்டு வருகின்றன. அவர்கள் பலுசிஸ்தானை தனி நாடாக பாகிஸ்தானில் இருந்து பிரிக்க வேண்டும் என்று தொடர் கோரிக்கை வைத்து பல்வேறு பயங்கரவாத செயல்களிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறான பயங்கரவாத சம்பவம் இன்று பலுசிஸ்தான் மாகாணம் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்துள்ளது. முசகைல் மாவட்டத்தில் பலுசிஸ்தானையும் […]
ஜம்மு-காஷ்மீர் எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதால், அதற்க்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது. சமீப காலமாக போர் நிறுத்த ஒப்பந்தக்களை மீறி எல்லையில் ராணுவ நிலைகள் மற்றும் கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தரப்பில் தாக்குதல் நடத்துவது அதிகமடைந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தரப்பில் உரிய பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், காஷ்மீர் எல்லைக்கு அருகே உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் மன்கோட் பிரிவில் இன்று காலையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி […]
காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் தீவிரவாத இந்த தாக்குதலுக்கு எதிராக அமெரிக்காவில் இந்தியர்கள் போராட்டம் நடத்தினர் காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் துணைராணுவ படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர்.இந்த கொடூர தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள்.மேலும் இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பல பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. […]
காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானுக்கு செல்லும் நதிகளில் நீரை தடுக்க வேண்டுமென்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் துணைராணுவ படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர்.இந்த கொடூர தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள்.மேலும் இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பல பாகிஸ்தானுக்கு கண்டனம் […]
இந்தியா பெரும் அழிவுகளை ஏற்படுத்தும் ஆயுதங்களை வாங்கி குவிப்பது தெற்காசியா அமைதிக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அந்நாட்டு அதிபர் ஆரிப் ஆல்வி கூறியதாவது:- தெற்காசிய பிராந்தியத்தில்பாதுகாப்பு தொடர்பாக ஸ்திரத்தன்மை இருக்க வேண்டும் என்று பாகிஸ்தான் விரும்புகிறது. இந்த விஷயத்தில் பாகிஸ்தான் மிகவும் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு வருகிறது. ஆனால், இந்தியா தனது ராணுவத்தில் பேரழிவு ஆயுதங்களை தொடர்ந்து சேர்த்து வருகிறது. இது தெற்காசியப் பிராந்தியத்தின் […]
பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று அதிகாலை மீண்டும் ஜம்மு காஷ்மீரின் யூரி பகுதியில் இந்திய நிலைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து இந்திய ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். நேற்று பாகிஸ்தான் படைகள் இந்திய கிராமங்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தின. பீரங்கி குண்டுகளும் வீசப்பட்டதால் கிராமவாசிகள் 5 பேர் உயிரிழந்தனர். இந்தியப் படைகள் திருப்பித் தாக்கியதில் 4 பாகிஸ்தான் வீரர்கள் பலியாகினர். தொடர்ந்து இன்று பத்தாவது நாளாக பாகிஸ்தான் படைகள் தாக்குதல் தொடுத்து வருவதால் எல்லையில் பதற்றமான […]
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராஜேரி மாவட்டத்தில் தொடர் பதற்றம் நிலவி வருகிறது. அந்த பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர் தாக்குதல் அத்துமீறி நடத்தி வருவதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. இந்த தாக்குதலில் இந்திய ராணுவ veeவீரர்கள் நான்கு பேர் பலியாகினர். இந்த அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்.
பாகிஸ்தான் படைத் தாக்குதலில் கடந்த நான்கு நாட்களில் 11 பேர் உயிரிழப்பு எனத் தகவல் . காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லைக்கு அப்பால் இருந்து கடந்த சில நாட்களாக தொடர்ந்து அத்துமீறித் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இரவு பகல் பாராமல் சிறிய ரக ராக்கெட் குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால், எல்லைக்கட்டுப்பாடு கோடு மற்றும் சர்வதேச எல்லைப்பகுதி கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி வருகின்றனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் […]
2017 ஆம் ஆண்டில் , எல்லைப் பகுதியில் நடைபெற்ற சண்டைகளில் 138 பாகிஸ்தான் ராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர்.இந்தியத் தரப்பில் 28 படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 70 பேர் காயமடைந்துள்ளனர் 2017 ஆம் ஆண்டில் , எல்லைப் பகுதியில் நடைபெற்ற சண்டைகளில் 138 பாகிஸ்தான் ராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் 860 முறை சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஷ்மீரில் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இதற்கு இந்தியாவும் தக்க பதிலடி கொடுத்துள்ளது.எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 138 பாகிஸ்தான் ராணுவத்தினர் கொல்லப்பட்டதாக […]
ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் எல்லைப் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த 50 வயதான தலைமைக் காவலர் ஆர்.பி. ஹஸ்ரா என்பவர் பாகிஸ்தான் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு பதிலடி தரும் விதமாக பாகிஸ்தானைச் சேர்ந்த பாதுகாப்புப் படையினர் நிலைகளை குறி வைத்து இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் இன்று தாக்குதல் நடத்தினர். இதில் பாகிஸ்தான் படையினர் 12 முதல் 15 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை ஐ.ஜி. ராமவ்தார், நேற்று […]
காஷ்மீரின் தெற்கு பகுதியான புல்வாமா மாவட்டம் லித்தாபோரா என்ற பகுதியில் உள்ள சி.ஆர்.பி.எப். எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ்படை முகாம் மீது கடந்த ஞாயிறன்று இரவு பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர்.உடனே சுதாரித்துக்கொண்ட சி.ஆர்.பி.எப்.படையினர் எதிர் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பிலும் கடந்த பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது. இவர்கள் இடையே நடந்த 37 மணி நேர துப்பாக்கிச் சண்டை நேற்று முடிவுக்கு வந்தது. இதில் 5 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.இது குறித்து […]
ஜம்முவில் எல்லைக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் நவ்சேராவில் இந்திய வீரர் வீரமரணம் அடைந்தார். ரஜோரி மாவட்டம் நவ்சேரா மற்றும் பூஞ்ச் மாவட்டம் திக்வார் பகுதியிலும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. அதிகாலை 1 மணி முதல் இன்று காலை வரை தாக்குதல் நீடித்தது. பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதலில் இந்திய வீரர் ஜக்சிர் சிங் என்பவர் உயிரிழந்தார். இந்திய ராணுவமும் உரிய பதிலடி கொடுத்து வருவதாக […]
இந்திய வீரர்கள் எல்லை தாண்டிச் சென்று பாகிஸ்தான் முகாம்கள் மீது துல்லியத் தாக்குதல் நடத்தியதையடுத்து இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகள் மட்டத்திலான சமாதானப் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது. இந்திய வீரர்கள் நடத்திய தாக்குதலில் 3 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்ததாக அந்நாட்டு ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். காஷ்மீரில் உள்ள ரஜோரி மாவட்டத்தில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 4 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இத்தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா திருப்பி தாக்கியுள்ளது. இத்தாக்குதல் காரணமாக […]