டெல்லி : வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக, மசோதா நாடாளுமன்றக் கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டு, பல திருத்தங்களுடன் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட பின்னர், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் இது சட்டமாகியுள்ளது. ஆம், வக்ஃபு சட்டத் திருத்தங்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததாக மத்திய சட்டத்துறை அமைச்சகம் அரசிதழில் வெளியிட்டுள்ளது. மக்களவையில் கடந்த ஏப்ரல் 3, 2025 அதிகாலை 288 […]
புதுடெல்லி : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றம் செய்யப்பட்டது. இது இஸ்லாமியர்களின் உரிமைகளை பறிக்கும் செயல் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில், வக்பு (திருத்த) மசோதா 2025, மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேறியது. ஏப்ரல் 4, 2025 அன்று அதிகாலை, சுமார் 12 மணி நேர விவாதத்திற்குப் பிறகு, மாநிலங்களவையில் இந்த மசோதா […]
டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அமெரிக்காவில் இறக்குமதியாகும் அயல்நாட்டு பொருட்கள் மீது அதிகப்படியான புதிய பரஸ்பர வரி (இறக்குமதி வரி) விதிமுறையை விதித்துள்ளார். இந்த வரி விதிப்பில் சுமார் 10%-ல் இருந்து 49% வரையில் அமெரிக்கவுடன் வர்த்தகம் வைத்துள்ள ஒவ்வொரு நாடுகளுக்கும் ஒவ்வொரு விதமாக வரி விதிமுறையை அமல்படுத்தியுள்ளார். இதில் இந்தியாவுக்கு 26 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்பட்டு உள்ளது. இந்த இறக்குமதி வரி வரும் ஏப்ரல் 9ஆம் தேதி முதல் அமலுக்கு […]
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றம் செய்யப்பட்டது. இது இஸ்லாமியர்களின் உரிமைகளை பறிக்கும் செயல் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த வக்பு வாரிய சட்டத் திருத்தத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் ஆளும் திமுக அரசு தீர்மானமும் நிறைவேற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படியான சூழலில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வக்பு வாரிய […]
டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு ஆதரவாக 288 உறுப்பினர்களும், எதிராக 232 உறுப்பினர்களும் வாக்களித்தனர். 8 மணி நேரத்திற்கு மேலாக நடந்த விவாதத்திற்குப் பிறகு, பெரும்பான்மை வாக்குகளுடன் இது நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா வக்பு சொத்துக்களின் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கும் உருவாக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது. மத்திய […]
டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தாக்கல் செய்தார். இந்த சட்டதிருத்தின் மீது அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த கூட்டத்தொடரில் திமுக சார்பில் அக்கட்சி எம்பி ஆ.ராசா பேசுகையில், அவையில் பேசுவதற்கு வாய்ப்பு அளித்ததற்கு நன்றி. மத்திய அமைச்சர் பேச்சை கேட்டேன். எங்கிருந்து இந்த கதைகளை அவர் […]
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வக்பு வாரிய திருத்த சட்டத்தை மக்களவையில் மத்திய சிறுபான்மை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தாக்கல் செய்தார். அப்போது வக்பு வாரிய திருத்த சட்டம் குறித்து பல்வேறு தகவல்களை கூட்டத்தொடரில் அவர் குறிப்பிட்டார். அப்போது வக்பு வாரிய சொத்துக்கள் தேசிய வளர்ச்சிக்கோ அல்லது இஸ்லாமியர்களின் வளர்ச்சிக்கோ பயன்படுத்தப்படவில்லை என குறிப்பிட்டார். அப்போது அவர் பேசுகையில், வக்பு வாரிய சொத்துக்கள் ஏழை இஸ்லாமியர்களுக்கு மருத்துவ உதவிகோ, கல்வி, சுகாதாரம் […]
டெல்லி : தொகுதி மறுவரையறை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனாலும், நாடாளுமன்றத்தில் இதுகுறித்து விவாதிக்க அனுமதி தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. இதனால், திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று தொகுதி மறுவரையறை குறித்து வாசகங்கள் அடங்கிய டி-ஷர்ட் அணிந்து கொண்டு சென்றனர். மக்களவையில் இதுகுறித்து விவாதம் நடத்த தொடர்ந்து வலியுறுத்தினர். ஆனால், தொடர் அமளி […]
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கடந்த வாரம் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து கடந்த திங்கள் முதல் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில், சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். நேற்று எதிர்க்கட்சி தலைவர் நெல்லை ஓய்வு எஸ்ஐ கொலைக்கு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்திருந்தார். தமிழ்நாடு சட்டப்பேரவை போல டெல்லியில் நாடாளுமன்றத்தில் மத்திய […]
டெல்லி : இசைஞானி இளையராஜா இம்மாதம் (மார்ச்) 8ஆம் தேதியன்று லண்டனில் தனது முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றினார். 34 நாட்களில் வேலியன்ட் எனும் தனது முதல் சிம்பொனி இசையை குறிப்பெழுதி அதனை லண்டனில் புகழ்பெற்ற ராயல் பில்ஹார்மானிக் ஆர்கெஸ்ட்ரா இசைக்குழுவுடன் இணைந்து தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றினார். இந்தியாவிலே முதல் நபராக சிம்பொனி இசையை அரங்கேற்றும் இசை கலைஞர் எனும் பெயர் பெற்றார் இசைஞானி இளையராஜா. சிம்பொனி இசையை அரங்கேற்றிய இளையராஜாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, […]
டெல்லி : இந்திய அமலாக்கத்துறையானது நாட்டில் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடைபெறுவதை தடுக்கும் ஒரு அரசாங்க விசாரணை அமைப்பு ஆகும். இந்த துறை மத்திய நிதித்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் மீது ஊழல் குற்றசாட்டு எழுந்தால் சிபிஐ, பொருளாதார விசாரணை பிரிவினர் அந்த குற்றம் பற்றி விசாரணை மேற்கொள்வர். அமலாக்கத்துறையானது அந்த ஊழலில் நிகழ்ந்ததாக கூறப்படும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை பற்றி விசாரணை மேற்கொள்ளும். இந்த அமலாக்கத்துறை (ED) சோதனை என்பது பரவலாக எதிர்க்கட்சி அரசியல் […]
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இராண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்களின் கேள்விகள் , அதற்கான துறை அமைச்சர்களின் பதில், மற்ற விவாதங்கள் ஆகியவை நடைபெற்று வருகின்றன. இதில் இன்று மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, உத்திர பிரதேசம் பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளா நிகழ்வு பற்றி பெருமை பொங்க பேசினார். பிரதமர் பேசுகையில், பிரயாக்ராஜின் மகா கும்பமேளா பற்றி பேசுவதற்காக நான் இங்கு வந்துள்ளேன். மகா கும்பமேளா வெற்றிகரமாக […]
சென்னை : மும்மொழி கொள்கை விவகாரம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பூதாகரமாக எழுந்து நிற்கிறது. குறிப்பாக நாடாளுமன்றத்தில் பட்ஜெட் 2ஆம் கட்ட கூட்டத்தொடரில் இந்த விவகாரம் அதிகளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த விவாதத்தின் போது தமிழக எம்பிகளை நாகரீகமற்றவர்கள் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் விமர்சித்து, அதன் பிறகு கண்டனங்கள் எழுந்த பிறகு அந்த கருத்துக்கு வருத்தம் தெரிவித்து அதனை திரும்ப பெற்றிருந்தார். இருந்தும், தர்மேந்திரா பிரதான் தமிழக அமைச்சர்கள் குறித்து கடும் விமர்சனம் […]
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது கட்டம் நாளை (மார்ச் 10) முதல் தொடங்கி ஏப்ரல் 4ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வக்பு வாரிய திருத்த சட்ட மசோதா உள்ளிட்ட பல்வேறு முக்கிய மசோதா நிறைவேற்றம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த கூட்டத்தொடரில் பங்கேற்கும் போது என்னென்ன விஷயங்கள் பற்றி பேச வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் திமுக எம்பிக்கள் இன்று அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனையில் ஈடுபட்டனர். […]
டெல்லி : வக்பு வாரியம் என்பது இஸ்லாமிய மக்களால் தானமாக வழங்கப்பட்ட சொத்துக்களை நிர்வகிக்கும் ஒரு இஸ்லாமிய அமைப்பு ஆகும். இந்த சொத்துக்கள் மூலம் கிடைக்கும் வருவாய் இஸ்லாமிய மக்கள் நலனுக்கு பயன்படுத்தபடுகிறது என கூறப்படுகிறது. இந்த வக்பு வாரிய விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு ஒரு குழுவை (JPC) கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நியமனம் செய்தது. இந்த குழுவில் பாஜக மற்றும் NDA கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 16 எம்.பி.க்களும், எதிர்க்கட்சிகளைச் […]
டெல்லி : நேற்று மாநிலங்களவையில் மத்திய பட்ஜெட் விளக்க கூட்டம் நடைபெற்றது. இதில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் குறித்து விவாதித்தார். அப்போது திமுக உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தும் வந்தார். இதில் பேசிய நிர்மலா சீதாராம ஆவேசமாக,” நான் பதில் சொல்வேன். அதனை கேட்க வேண்டியது உங்கள் கடமை.” எனக் கூறினார். நிர்மலா சீதாராமன் : மேலும், ” ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டபோது காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து இருந்தது திமுக. அப்போது அதனை பற்றி […]
டெல்லி : மத்திய பட்ஜெட் 2025-க்கான கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜனவரி 31-ல் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். அதனை அடுத்து பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் 2025-ஐ தாக்கல் செய்தார். அடுத்ததாக திமுக, காங்கிரஸ் என ஒவ்வொரு கட்சி சார்பாகவும் அக்கட்சி தலைவர்கள் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து வந்தனர். இன்று பிரதமர் நரேந்திர மோடி குடியரசு தலைவர் […]
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒவ்வொரு கட்சி நாடாளுமன்ற குழு தலைவரும் பட்ஜெட் உரை மீதான தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். ஏற்கனவே காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் கருத்துக்களை நாடாளுமன்றத்தில் பதிவு செய்துள்ள நிலையில், திமுக சார்பில் நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி தனது கருத்துக்களை பதிவு செய்தார். அவர் பேசுகையில், ” மத்திய அரசும் மாநில அரசும் தங்களை பாதுகாக்கும் என்ற நம்பிக்கையில் உத்திர பிரதேச […]
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கடந்த சனிக்கிழமை இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று திங்கள் கிழமை மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சில விஷயங்களை குற்றம் சாட்டி வெளிப்படையாகவே பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” கடந்த முறையும் அதற்கு முந்தைய முறையும் கூறப்பட்ட விஷயங்களையே […]
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை.இதனையடுத்து, தமிழகத்தை சேர்ந்த அரசியல் தலைவர்களும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஏற்கனவே, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுக மூத்த தலைவர் டி.ஆர். பாலு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பேசியிருந்த நிலையில், அவர்களை தொடர்ந்து தற்போது, த.வெ.க தலைவர் விஜய் தனது எக்ஸ் வலைத்தள […]