நமீபியா : பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகள் பயணத்தின் இறுதி கட்டமாக, நேற்றைய தினம் நமீபியா சென்று சேர்ந்துள்ளார். நமீபிய தலைநகர் விண்டோக்-கில், அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர், விமான நிலையத்தில் பிரதமரை வரவேற்றார் 5 நாடுகள் பயணத்தின் நமீபியா சென்றுள்ள பிரதமர் நரேந்திரமோடி நேற்று அந்நாட்டு அதிபருடன் பிரதிநிதிகள் நிலையில் பேச்சு வார்த்தை நடத்தினார். அதிபர் நெடும்போ நந்தி – நதைத்வா முன்னிலையில், இந்தியா – நமீபியா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. […]
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள ஜூலை 27ம் தேதி டெல்லி செல்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். டெல்லியில் ஜூலை 27-ஆம் தேதி (சனிக்கிழமை)அன்று நடைபெறும் “நிதி ஆயோக்” ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில், அனைத்து மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேசங்களின் லெப்டினன்ட் கவர்னர்கள் மற்றும் பல மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், 2047க்குள் நாட்டை வளர்ந்த […]
PM Modi : இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடற்கொள்ளையர் மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், கடற்படை சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும் தொடர்ந்து பாடுபடுவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார். கடந்தாண்டு டிசம்பர் மாதம் MV Ruen என்ற சரக்கு கப்பலை அரபிக்கடலில் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டு, தங்கள் வசம் வைத்திருந்தனர். Read More – தேர்தலுக்கு திமுக கூட்டணி தயார்.! எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள்.? முழு விவரம் இதோ… அந்த கப்பலில் பல்கேரியா, மியான்மர் […]
வெளிநாடுகளில் யுபிஐ சேவையை அறிமுகப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, அமெரிக்க, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் ஏற்கனவே யுபிஐ சேவை (Unified Payments Interface) மூலம் பரிவர்த்தனை செய்வதற்கான வாய்ப்பை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. அந்த வகையில் தற்போது மொரிஷியஸ் யு.பி.ஐ மூலம் பணம் செலுத்தும் நாடுகளின் பட்டியலில் இணைந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத் ஆகியோர் இணைந்து, இரு நாடுகளிலும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்காக ரூபே […]
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 31-ஆம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கிய நிலையில் இன்றுடன் நிறைவு பெறுகிறது. மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடையும் நிலையில், அயோத்தி ராமர் கோவில் பற்றிய விவாதத்தை மத்திய அரசு நடத்த முடிவு செய்தது. அதன்படி, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று பல்வேறு விவாதங்கள், வெளிநடப்புகள் என அரங்கேறியது. இந்த நிலையில், ராமர் கோவில் திறப்பு தொடர்பான தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் […]
இந்தியா எரிசக்தி வாரம் 2024, பிப்ரவரி 6 முதல் 9 வரை கோவாவில் நடைபெறுகிறது. இதனை தொடங்கி வைப்பதற்கும், வளர்ச்சியடைந்த பாரதம், வளர்ச்சியடைந்த கோவா 2047 உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு ஒருநாள் பயணமாக பிரதமர் மோடி இன்று கோவாவுக்கு வருகை தந்துள்ளார். அதன்படி, கோவாவில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் ரூ.1,330 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிலையில், கோவாவில் ஓ.என்.ஜி.சி கடல்வாழ் உயிரின மையத்தைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். […]
கேலோ இந்திய விளையாட்டுப் போட்டிக்கான அழைப்பிதழை வாங்க இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெல்லி செல்கிறார். கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை செய்து வருகிறது. கேலோ இந்திய விளையாட்டு போட்டி ஜனவரி 19-ஆம் தேதி முதல் ஜனவரி 31ம் தேதி வரை தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 இடங்களில் நடைபெற உள்ளது. இந்த விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் 36 மாநிலங்கள் மற்றும் […]
டெல்லி:பிரதமர் மோடியின் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக குழு அமைத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூரில் ரூ. 42,750 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட இருந்தார்.இந்த நிகழ்ச்சிக்காக கடந்த ஜனவரி 5 ஆம் தேதி பஞ்சாப் சென்ற பிரதமர் மோடி,விமான நிலையத்திலிருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் செல்ல இருந்த நிலையில் மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் பயணம் ரத்து செய்யப்பட்டு சாலை மார்க்கமாக பிரதமர் சென்றார். […]
பிரதமர் நரேந்திர மோடி இன்று மணிப்பூர் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் நரேந்திர மோடி இன்று மணிப்பூர் மற்றும் திரிபுரா மாநிலங்களுக்குச் சென்று பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்கவுள்ளார்.அதன்படி,காலை 11 மணியளவில்,பிரதமர் மணிப்பூரின் இம்பாலில் ரூ.4,800 கோடி மதிப்பிலான 22 வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அந்த வகையில்,மணிப்பூரில் சுமார் ரூ.1,850 கோடி மதிப்பிலான 13 திட்டங்களை பிரதமர் தொடங்கி வைப்பார் மற்றும் ரூ.2,950 கோடி மதிப்பிலான ஒன்பது திட்டங்களுக்கு அடிக்கல் […]
டெல்லி:பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN) திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கான 10-வது தவணை உதவித்தொகையை பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் விடுவித்துள்ளார். பிரதான் மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் தகுதியான விவசாயக் குடும்பங்களுக்கு உதவித்தொகையாக ஒரு வருடத்திற்கு ரூ 6,000 வழங்கப்பட்டு வருகிறது.அதாவது,நான்கு மாதத்துக்கு ஒரு முறை ரூ.2,000 என ஒரு வருடத்தில் 3 தவணைகளாக வழங்கப்படுகிறது.இந்த உதவித்தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில்,இத்திட்டத்தின் மூலம் விவசாயக் […]
திரிபுரா வீட்டு வசதி திட்ட பயனாளிகளுக்கு இன்று சுமார் ரூ.700 கோடி அளவிலான நிதியை முதல் தவணையாக பிரதமர் மோடி வழங்க உள்ளார். திரிபுராவில் ஏராளமான மக்கள் அதிக பலமில்லாத வீடுகளில் வசித்து வருவதாக கூறப்படும் நிலையில்,பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமின் (PMAY-G) என்ற திட்டத்தின்கீழ் நகர்ப்புற ஏழைகளுக்கு வீடு வழங்கும் திட்டத்தின் முதல் தவணையை திரிபுராவின் 1.47 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று மதியம் 1 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் […]
நடிகர் புனீத் ராஜ்குமார் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் புனீத் ராஜ்குமார் (வயது 46) மாரடைப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டு,ஐசியூவில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்த நிலையில்,சிகிச்சை பலனின்றி காலமானார். புனீத் ராஜ்குமார் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், ஆனால், ரசிகர்கள் கவலைப்படத் தேவையில்லை என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. இதன்பின், புனித் ராஜ்குமாரின் உடல்நிலை மோசமான […]
தனக்கு கிடைத்த பரிசுகள் மற்றும் நினைவு பொருட்களை ஏலத்தில் விடும் நிகழ்வில் பங்கேற்குமாறு பிரதமர் மோடி மக்களை கேட்டுக் கொண்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி,மத்திய கலாச்சார அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இ-ஏலம் வெள்ளிக்கிழமை தொடங்கியது, அக்டோபர் 7 வரை தொடரும்,இன்று ஏலத்தின் மூன்றாவது நாளாகும்,அதன்படி, இதில் தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் https://pmmementos.gov.in/#/ என்ற இணையதளம் வழியாக பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற லவ்லினா போர்கோஹைனின் குத்துச்சண்டை கையுறைகள் இ-ஏலத்தில் அதிக ஏலத்தைப் […]
குஜராத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். குஜராத்தில் விஜய் ரூபானி கடந்த 2016-ம் ஆண்டு முதல் முதல்வராக இருந்து வந்தார். திடீரென ஆளுநரை சந்தித்து விஜய் ரூபானி தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். பின்னர், எந்த எதிர்ப்பின்றி பூபேந்திர படேல் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதல்வராக தேர்வு செய்யப்பட்டு கடந்த 13-ஆம் தேதி காந்திநகரில் உள்ள ராஜ்பவனில் பதவி ஏற்று கொண்டார். இதனையடுத்து,இன்று குஜராத் ஆளுநர் புதிய அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து […]
பெண் தொழில்முனைவோருக்கு கடன் உதவிக்தொகையாக ரூ. 1,625 கோடியை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். பிரதமர் நரேந்திர மோடி இன்று 4 லட்சம் பெண் தொழில்முனைவோருக்கு கடன் உதவிக்தொகையாக ரூ. 1,625 கோடியை வெளியிட்டார். மேலும்,மகளிர் சுய உதவி குழுக்களுக்கான (SHGs) கடன் வரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ. 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்தார். பிரதமர் ‘ஆத்மநிர்பர் நாரி சக்தி சே சம்வாத்’ நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பங்கேற்றபோது இந்த திட்டத்தை அறிவித்தார்.அதன்பின்னர், தீன்தயாள் […]
பிரதமர் நரேந்திர மோடியுடன் பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து,ஐஸ்கிரீம் சாப்பிடுவார் என்று அவரது தனத்தை பிவி ரமணா தெரிவித்துள்ளார். இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்து,நேற்று நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சீனாவின் ஹி பிங் ஜியாவோவை 21-13,21-15 என்ற கணக்கில் வீழ்த்தி, வெண்கல பதக்கம் வென்றார்.இதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 2 வது பதக்கம் கிடைத்தது.2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்றார். பிவி ரமணா: இந்நிலையில்,சிந்துவின் […]
மத்திய அரசானது ஆமை வேகத்தில் செயல்படாமல்,முயல் வேகத்தில் செயல்பட்டு மக்களின் உயிரைக் காப்பற்ற வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில்,அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.முதற்கட்டமாக,முன்களப் பணியாளர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடப்பட்டது. இதனைத்தொடர்ந்து,மே 1 ஆம் தேதியிலிருந்து 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இதற்கிடையில்,சில தனியார் மருத்துவமனைகள் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு அதிக […]
நாட்டின் கொரோனா தொற்று நெருக்கடியைச் சமாளிக்க ,மத்திய அரசு தனது வேலையைச் சரியாக செய்திருந்தால்,வெளிநாடுகளில் இருந்து உதவிகள் பெற வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையானது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில்,கொரோனா முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து மத்திய அரசானது முறையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில்,காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் […]
பிரதமர் நரேந்திர மோடி,டெல்லியில் உள்ள குருத்வாராவுக்கு எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாமல் சனிக்கிழமையன்று சென்றுள்ளார். சீக்கியர்களின் 9வது குருவான தேக் பகதூரின் 400 வது பிறந்த நாளையொட்டி சனிக்கிழமையன்று பிரதமர் நரேந்திர மோடி குருத்வாராவின் சிஸ் கஞ்ச் சாஹிப் பகுதிக்கு சென்று வழிபாடு செய்துள்ளார்.ஆனால்,எந்தவித சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி பிரதமர் மோடி குருத்வாராவுக்கு சென்றுள்ளார் என்று பிரதமர் அலுவலகம் (பி.எம்.ஓ) தெரிவித்துள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டரில் கூறியதாவது,”குரு தேக் பகதூரின் 400 வது பிறந்த […]
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த பிரதமர் நரேந்திர மோடியின் சித்தி நேற்று மாலை உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது.இதனால்,ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றால் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.மேலும்,கொரோனவால் உயிரிழப்போரின் எண்ணிகையும் அதிகமாகி வருகின்றன. இந்த நிலையில்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு அகமதாபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரதமர் மோடியின் சித்தி நர்மதாபென்(80 வயது) நேற்று உயரிழந்ததாக மோடியின் சகோதரர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடியின் […]