தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2022-23ம் ஆண்டில் ரயில்வே செயல்பாடுகள் சிறப்பாக உள்ளதால் 78 நாள் ஊதியம் போனஸாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க ரூ.1,968.87 கோடி நிதி ஒதுக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என மத்திய அமைச்சர் அனுராக் […]