திருமிகு.ராஜேஸ்வரி அவர்கள் தமிழக டி.ஐ.ஜி ஆகப் பொறுப்பேற்றிருப்பது எங்கள் குடும்பத்திற்கு கிடைத்த பெருமையும் கூட என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் 39 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதில், தமிழக முன்னாள் உள்துறை அமைச்சர் கக்கனின் பேத்தி ராஜேஸ்வரி தமிழக சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரெண்டாக இருந்து வந்த அவரை பதவி உயர்வு பெற்று சென்னை ஆயுதப்படை டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான […]