புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தியதால், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரின் கோரிக்கைப்படி மக்கள் முன்னிலையில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு நீதித்துறையின் மிசான் ஆன்லைன் செய்தி வலைத்தளத்தின்படி, வடமேற்கு நகரமான புக்கானில் ஒரு இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு சனிக்கிழமை பொதுவில் தூக்கிலிடப்பட்டது. சட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பாதிக்கப்பட்டவரின் […]