அணுஉலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார், மாநில சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் குறித்து தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் கூறப்படுகிறது. அந்த பதிவில், அதிமுக அரசையும், முதலமைச்சர் பழனிசாமியையும் குறிப்பிட்டு ஒட்டப்பட்ட போஸ்டர் ஒன்றை பகிர்ந்து உள்ளார். இதனையடுத்து, வடிவீஸ்வரம் கிராம நிர்வாக அதிகாரி மோகன் என்பவர் இதுகுறித்து, போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் அணுஉலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் மீது கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.