இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசால், மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைககள் எடுத்து வருகின்றனர். இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கையில் கேரளா 2ம் இடத்தில் உள்ளது. கேரளாவில் இதுவரை 28 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்த நிலையில் கொரோனாவை எதிர்கொள்ள கேரளா முதல்வர் பினராயி விஜயன் ரூ.20,000 கோடி நிதி ஒதுக்கி ஒரு சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளார். அதில் ரூ.2,000 கோடி வறுமை […]