தமிழகத்தில் செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து ‘மெட்ராஸ் ஐ’ கூடுதலாக பரவி வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி. சென்னை, எழும்பூரில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து ‘மெட்ராஸ் ஐ’ கூடுதலாக பரவி வருகிறது. கண்ணில் உருத்தல், சிவந்த நிறம், அதிக கண்ணீர், வீக்கம் ஆகியவை ‘மெட்ராஸ் ஐ’ நோய் அறிகுறி. குடும்பத்தில் ஒருவருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டால் 4 நாட்கள் தனிமைப்படுத்திக் […]