ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி20 உலக கோப்பையின் இறுதிப்போட்டியில் இன்று மெல்போர்னில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்று இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது இதனைத்தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்களை எடுத்தது. […]