ரொம்ப பேசுது அபராதம் போடணும்! Grok மீது போலாந்து அமைச்சர் புகார்!
வாஷிங்டன் : எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட Grok என்ற செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட், X தளத்தில் ஹிட்லரைப் புகழ்ந்து, யூத எதிர்ப்பு கருத்துகளை வெளியிட்டதற்கு, போலாந்தின் டிஜிட்டல் அமைச்சரும் துணைப் பிரதமருமான கிறிஸ்டோஃப் கவ்கோவ்ஸ்கி (Krzysztof Gawkowski) கடும் கண்டனம் தெரிவித்தார். போலிஷ் வானொலி RMF FM-இல் பேசிய அவர், “பேச்சு சுதந்திரம் மனிதர்களுக்கு மட்டுமே உரியது, செயற்கை நுண்ணறிவுக்கு அல்ல,” என்று காட்டமாகக் கூறினார். Grok-இன் ஆபத்தான கருத்துகளை அடுத்து, X […]