தமிழக நாடார் சங்க பேரவை தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமையிலான குழு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ரூ.1 கோடி நிதியுதவி வழங்கியுள்ளனர். தமிழக முதலமைச்சரின் கொரோனா தடுப்பு பணிக்கு நிவாரண நிதியாக பல்வேறு பிரபலங்களும், பொதுமக்களும் நிதியுதவி வழங்கி வருகின்றனர். அந்த வகையில், சென்னை தலைமை செயலகத்தில், தமிழக நாடார் சங்க பேரவை தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமையிலான குழு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ரூ.1 கோடி நிதியுதவி வழங்கியுள்ளனர்.