மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் என்டிஆரின் வாழ்க்கையை தழுவி என்டிஆர் படம் உருவாகி வருகிறது. இதில் என்டிஆராக அவரது மகன் பாலகிருஷ்ணா நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் துவக்க விழா நடந்தது. அதில் துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு கலந்துகொண்டார். இதில் ஹீரோயினாக நடிக்க வித்யா பாலனிடம் பேசியுள்ளனர். இந்நிலையில் படத்தில் நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் ஜெயலலிதா வேடத்துக்காக படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். ஜெயலலிதா சினிமாவில் நடித்தபோது, தெலுங்கில் என்டிஆர் படங்களிலும் நடித்துள்ளார். இளமை கால ஜெயலலிதா […]