மதுரை தத்தனேரி மின்மயானத்தில் இரவு பகலாக கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டு வருவதால் கரும்புகையுடன் கருந்துகள்கள் பறந்து வருவதாக அருகில் குடியிருக்கும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். மதுரை செல்லூர் பகுதியில் தாகூர் நகர் மக்கள் இது குறித்து கூறுகையில், தத்தனேரி மின்மயானத்தில் இரவு பகலாக 60-க்கும் மேற்பட்ட கொரோனாவால் இறந்த உடல்கள் எரிக்கப்பட்டு வருவதால் அருகில் இருக்கும் வீடுகளிலும், மொட்டை மாடிகளிலும், தண்ணீர் சேமித்து வைக்கும் பாத்திரங்களிலும், மக்கள் மீதும் கருந்துகள்கள் பரவுவதாக அச்சம் தெரிவித்துள்ளனர். மதுரையில் […]