சென்னை : திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, சமீபத்தில் சென்னை பெரம்பூரில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பேசியபோது, பெருந்தலைவர் காமராஜர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தார். இது தொடர்பாக திருச்சி சிவா பேசுகையில், “காமராஜரருக்கு ஏசி இல்லையென்றால் உடம்பில் அலர்ஜி வந்துவிடும். அதற்காக திமுக ஆட்சிக் காலத்தில், அவர் தங்குகிற எல்லா பயணியர் விடுதியிலும் குளிர்சாதன வசதி செய்யச் சொல்லி உத்தரவிட்டதாக கலைஞர் கருணாநிதி என்னிடம் சொன்னார். கருணாநிதியின் கையைப் பிடித்து, நாட்டையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற […]
சென்னை : திமுக துணைப் பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா, மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜர் குறித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், முன்னாள் முதல்வர் காமராஜர், குளிர்சாதன வசதி இல்லாமல் தூங்க மாட்டார் என்றும் “நீங்கள் தான் இந்த நாட்டையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டும்” என்று கருணாநிதியிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இவர் பேசியதை பார்த்த அரசியல் தலைவர்கள் பலரும் இவருடைய பேச்சுக்கு கண்டனங்களை தெரிவிக்க தொடங்கிவிட்டார்கள். […]
சென்னை: திமுக துணைப் பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா, மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜர் குறித்து தான் பேசிய கருத்துகள் சர்ச்சையாகி, விவாதப் பொருளாகியிருப்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், முன்னாள் முதல்வர் காமராஜர், குளிர்சாதன வசதி இல்லாமல் தூங்க மாட்டார் என்றும் “நீங்கள் தான் இந்த நாட்டையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டும்” என்று கருணாநிதியிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, நாம் தமிழர் கட்சியின் […]